பக்கம் எண் :

48தமிழர் வரலாறு-1

அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்" 

(புறம்.140)

என்னும் பிற்காலச் செய்யுள் முற்காலநிலைமையையும் உணர்த்தும்.

"தென்கால் விடுக்குஞ் செம்பிற் பொருப்பு" 

(கல்லா.51:11)

செம்பிற் பொருப்பு = செம்புத்தாதுஉள்ள மலை. இதைச் செப்புவரை யென்று குற்றாலத்தலபுராணங் கூறும்.

செந்நிறமாயிருந்ததனால், செம்புஎன்றும் செம்பொன் என்றும் தாம்பரம் என்றும்,புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மாழை அல்லதுபொன்னம் பெயர் பெற்றது.

செம் - செம்பு - செப்பு.

தும் - தும்பு - தும்பரம் = சிவப்பானஅத்திப்பழம், அப் பழம் பழுக்கும் மரம்.

தும்பரம் - வ. உதும்பர.

தும்பு - துப்பு = 1. சிவப்பு. 2. பவழம்."துப்புறழ் தொண்டைச் செவ்வாய்" (சீவக. 550).3. அரக்கு (பிங்.).

தும் - துமர் - துவர் = 1. சிவப்பு"துவரிதழ்ச் செவ்வாய்" (சிலப். 6:26). 2.பவழம் (திவா.) 3. துவரம்பயறு அல்லது செடி.'துவர்ங்கோடு' (தொல். எழுத்து.393,உரை).4. காவி."துவருறு கின்ற வாடை யுடல்போர்த்து"(தேவா.608:10). 5. துவர்ப்பு. "துவர்மருவப் புளிப்பேற்றி" (தைலவ.தைல.). 6. நாவல் அல்லது பூவந்தி,கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி,முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்றபத்துத் துவர்ப்பு மருந்துப் பொருள். "விரையொடுதுவருஞ் சேர்த்தி" (சீவக.623). 7.பாக்கு. "வாசமணத்துவர் வாய்க்கொள் வோரும்" (பரிபா.12:22).

காசுக்கட்டியும் சாயப்பாக்கும்போன்ற செஞ்சரக்குத் துவர்ப்பா யிருப்பதால்,துவர் என்னுஞ் சொல் துவர்ப்புப் பொருள் கொண்டது.