பக்கம் எண் :

தமிழர் வரலாறு-169

அடுத்தமெய்ந் நண்பர்அந்த ணாளர்
மடைத்தொழி லாளர் மருத்துவக் கலைஞர்
வருவது கூறும் வானூற் கணியர்
அரசர்க் கைவகை யுறுதிச் சுற்றம்.

பாண்டியன் தன் ஆள்நிலத்தை மூன்று மண்டலங்களாகவும், ஒவ்வொரு மண்டலத்தையும் பலநாடுகளாகவும், ஒவ்வொரு நாட்டையும் பலகூற்றங்களாகவும் பிரித்தாண்டதாகத்தெரிகின்றது. மண்டலம் என்னுஞ் சொல் மண்டிலம்என்றுந் திரியும்.

மண்டலம் என்பது வட்டம். அச் சொல்வட்டம், வட்டகை, வட்டாரம் என்னும் சொற்கள்போன்று நாட்டுப் பகுதியைக் குறித்தது. அது தூயதென்சொல்லே.

முண்டு = உருட்டுக் கட்டை. முண்டு - முண்டம்= உருண்டு திரண்ட கட்டி, சதைத்திரள், கை கால்தலையில்லா வுடல், பெரிய வுருட்டுக் கட்டை. முண்டு -முண்டை = முட்டை. முண்டு - முட்டு- முட்டை. முண்டு - மண்டு.மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டி. மண்டியிடுதல் =காலை மடக்குதல்.

மண்டு - மண்டலம் = 1. வட்டம் (பிங்.).'சுடர் மண்டலம்’ (திருநூற்.80). 2.வட்ட வடிவம்(திவா.), 3. மந்திரச் சக்கரம். 4. கதிரவனை அல்லதுதிங்களைச் சுற்றியுள்ள ஊர்கோள் (வட்டவொளிக்கோடு). 5.காதலன் காதலியின் உடம்பிற்பொறிக்கும் வட்ட வடிவமான உகிர்க்குறி. 6. கயிறுபாம்பு முதலியவற்றின் சுற்று. "மண்டலம்பயிலுரகர்" (பாரத. குருகுல.3). 7. வட்ட வடிவமானபடைவகுப்பு(குறள். 767, உரை). 8. குதிரை வட்டமாகச்சுற்றி யோடுதல். "பண்ணிய வீதி பற்றி மண்டலம்பயிற்றி னானே" (சீவக.795). 9.நடுவிரல் நுனியும்பெருவிரல் நுனியும் கூடி வளைந்திருக்க மற்றவிரல்களும் ஒக்க வளைந்து நிற்கும்இணையாவினைக்கை (சிலப். 3:18, உரை). 10.வில் லோர்இருகாலையும் வளைத்து நிற்கும் நிலை.

மண்டலம் - மண்டலி.

மண்டலித்தல் = 1.வளைத்தல்.2.காலைவளைத்து நிற்றல். 3.சுற்றிச் சுற்றி வட்டமிடுதல்.4. ஒரு பாட்டின் இறுதி எழுத்து அசை சீர் சொல்என்பவற்றுள் ஒன்று அடுத்த பாட்டின் முதலில்அமையப் பாடுதல்.

மண்டலம் - மண்டிலம் = 1.வட்டம்.2.வட்டவடிவம். 3.கதிரவன். "பகல்செய் மண்டிலம்பாரித் தாங்கு" (பெரும்பாண். 442). 4. திங்கள்."செய்வுறு மண்டிலம்" (கலித்.7). 5. வட்டக்கண்ணாடி "மையறு மண்டிலம் போலக் காட்ட"(மணிமே.25:137). 6. வானம்.