பக்கம் எண் :

68தமிழர் வரலாறு-1

வேறாவிடின் இறந்துபடும் நிலைமையையும் உன்னி,பெண்ணின் பெற்றோரை வற்புறுத்தி இசைவித்துமணத்தை முடித்துவைப்பர். இது இக்காலத்து உண்ணாநோன்பும் பாடுகிடப்பும் (சத்தியாக்கிரகமும்)போன்றது. பழைய வுரையிலுள்ள வீரியம் என்னும்சொற்கு விந்து என்று பொருள் கொள்ளுவதுபொருந்தாது.

பெண்ணின் பெற்றோர் ஊரைப்பகைத்துக்கொள்ள முடியாது. அதனால்,மடலேற்றத்தாற் காதலன் கருதியது கைகூடும்வாய்ப்புண்டு. ஆயின், அதே சமையத்தில், காதலன்தன்மானத்தைத் துறக்கவும் நோவைத் தாங்கவும்காயம் மிகின் உயிரை இழக்கவும் அணியமாயிருத்தல் வேண்டும். இதன் அருமை நோக்கியேஎல்லாரும் இதை மேற்கொள்வதில்லை. சிலர்வெற்றரட்டாக விளம்பிச் சொல்லளவிலேயேநின்றுவிடுவர்.

இம் மடலேற்ற வழக்கு நாகரிகம்நிரம்பாத பழங்காலத்திற் குரியதாதலால்,தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே அற்றுப்போயிருத்தல் வேண்டும். ஆயின், இன்றும் ஒருவர்கோவை பாடின், மடலூர்தலும் ஒரு துறையாக அமைதல்வேண்டுமென்பது புலனெறி வழக்கமாகும். ஆதலால்,அயல்நாட்டார் அகப்பொருட் செய்யுள் களைப்படித்தவுடன் பண்டைத் தமிழ்நாகரிகத்தைப்பற்றித் தவறான எண்ணங்கொள்ளாவாறு, மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழாசிரியரிடமே தமிழ் பயிலுமாறு செய்தல்வேண்டும். கோடன் மாரும் வையாபுரிகளும் தமிழைப்பழிப்பதிலுங் கெடுப்பதிலும் ஆரியரினும்விஞ்சியவராவர்.

அரபிக் குதிரைகள் வந்தபின்,பாண்டியனுக்கும் அவன் சிற்றரசர்க்கும்,காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படைஎன்னும் நால்வகைப் படைகள் அமைந்தன.

ஆட்சித்துணையாக, ஐம்பெருங் குழுவும்எண்பேராயமும் ஐவகை யுறுதிச் சுற்றமும் எனப்பதினெண் குழுவார் அமைந்தனர்.

அமைச்சர் பூசகர் அணிபடைத் தலைவர்
தூதர் மிக்க துணிவுடை யொற்றர்
அரசர்க் கான ஐம்பெருங் குழுவார்.

கணக்கிய லாளர் கருமத் தலைவர்
கருவூ லத்தார் கடைகாப் பாளர்
நகர மாந்தர் நளிபடைத் தலைவர்
குதிரை மறவர் கொல்யானை மறவர்
அரசர்க் கெண்பே ராயத் துணைவர்