கோவேறு கழுதை, பிற்காலத்திற்கி.மு.ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே சின்னஆசியாவிற் பயன்படுத்தப்பட்டதாகத்தெரிகின்றது. அது ஆண்கழுதைக்கும் பெண்குதிரைக்கும்பிறந்த கலப்பினமாகும். வணிகச் சாத்திற்குக் கழுதையும்குதிரையுமே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. "தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப நெரியற் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத் தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்." | (பெரும்பாண்.77-80) |
அரபிக் குதிரைகள் பெரியனவும் பேணுதற் கரியனவுமாதலால், பெரும்பாலும் படைகட்கும் அரசர்ஊர்தற்குமே பயன்படுத்தப்பட் டிருக்கும்.நாட்டுத்தட்டு என்றும் அச்சிமட்டம் என்றும்சொல்லப் படும் சிறுதரக் குதிரைகளையே சாத்துகள்பயன்படுத்தி யிருக்கும். நாட்டுத்தட்டுஇந்தியாவிலேயே வளர்க்கப்படுவது. அச்சிமட்டம்சுமதுராத் (Sumatra)தீவின் வடமேற்குப் பகுதியாகிய அச்சியிலிருந்து (Achin)வந்தது. சாத்துகள் குதிரைகளைப்பயன்படுத்தியதை, பெருஞ்சாலை வழிகளில்ஆங்காங்குக் கட்டப்பட்டிருக்கும் சாத்தனார்(ஐயனார்) கோவிற்குமுன், சுதையாலும் சுடுமண்ணாலும்செய்து நிறுத்தப் பட்டுள்ள குதிரையுருவங்களினின்றுஅறிந்துகொள்ளலாம். ஓர் இளைஞன் தான் காதலித்த பெண்ணைஅவள் பெற்றோர் தர இசையாவிடின், நீர்ச்சீலைமட்டும் அணிந்து உடம்பு முழுதும் சாம்பற்பூசிஎருக்குமாலை யணிந்து, ஊர் நடுச்சந்தியிற்பனங்கருக்கு மட்டையாற் செய்த குதிரைமே லமர்ந்து,தான் காதலித்த பெண்ணின் உருவப்படத்தைவலக்கையிலேந்தி, அதை உற்று நோக்கியவண்ணமாயிருப்பான். ஊர்ப்பெருமக்கள் அதனைப்பார்த்தவுடனேயே, அவன் எல்லா வகையிலும்பெண்ணிற்குத் தகுதியுள்ளவ னென்றும் அவனிலுஞ்சிறந்தவன் இல்லையென்றுங் காணின், பெண்ணின்பெற்றோரிடம் பேசித் திருமணத்திற்கு ஏற்பாடுசெய்திருக்கவுங் கூடும். அது அத்துணை எளிதாக முடிவதாயில்லாவிடின், அவர் அவனை நோக்கி, "நீ ஆய்வுதருகின்றையா?" என வினவுவர். அவன்"தருகின்றேன்" எனின், அவனை அம் மடற்குதிரைமீது அமர்ந்திருந்த வாறே பெருந்தெரு வழியாகஊரைச் சுற்றி யிழுப்பர். பனங்கருக்காற் காயம்படுந்தொறுங் காதல் மறம் (வீரியம்) கிளரின்,அவன் கடைப் பிடியையும் அவன் எண்ணம் நிறை
|