சார் - சார்த்து - சாத்து = 1. கூட்டம். "சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்" (கல்லா.63:32) 2.வணிகர் கூட்டம். "சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்" | (சிலப்.11:190) |
சாத்து - வ. ஸார்த்த. சாத்து - சாத்தன் = 1.வணிகக் கூட்டத் தலைவன் (நன்.130, மயிலை.) 2. வணிகர் தெய்வமான ஐயனார்(அரு.நி.).3. வணிகர்க்கிடும் இயற்பெயர்களுள் ஒன்று. 4.சீத்தலைச் சாத்தனார். "அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்" (சிலப்.பதி.10). 5. யாரேனும் ஒருவனைக் குறிக்கும் பொதுப் பெயர். "அக் கடவுளாற் பயன்பெற நின்றானோர் சாத்தனை" (தொல். பொருள். 422,உரை). 6. உழவர் எருதிற்கிடும் விரவுப்பெயர். வடவர் ஐயனாரைக் குறிக்கும்போதுசாஸ்தா என்றும், சாஸ்த்ரு என்றும் திரிப்பர்.இதனின்று அவர் ஏமாற்றை அறிந்து கொள்க. சாத்தர் = வெளிநாடு சென்றுவரும்வணிகக் கூட்டத்தார். "அதர்கெடுத் தலறிய சாத்தரொ டாங்கு" | (அகம்.39) | சாத்தவர் = சாத்தர்."பழுதில் சாத்தவர்கள் சூழ" | (திருவாலவா. 27:1) |
சாத்தன் என்னுஞ் சொல்பிற்காலத்திற் சாத்துவன் என்றும் சாத்துவான்என்றுந் திரிந்தது. கண்ணகியின் தந்தைமாசாத்துவான் (பெருஞ்சாத்தன்) என்று இயற்பெயர்பெற்றிருந்தமை காண்க. சாத்தர் தம் வணிகச் சரக்குகளைஏற்றிச் செல்ல முதலிற் பொதியெருதுகளைப்பயன்படுத்தினர். பின்னர் மேலையாசியாவி னின்றுகழுதை, குதிரை, ஒட்டகம், கோவேறு கழுதை ஆகியவற்றைப் படிப்படியாகக் கொண்டுவந்து பழக்கினர். கழுதையின் பிறப்பிடம், வடகிழக்குஆப்பிரிக்காவில் எத்தி யோப்பியா சோமாலிமுதலிய நாடுகளும், மேலையாசியாவில் சிரியாபாரசீகம் பெலுச்சித்தானம் முதலிய நாடுகளும், நடுஆசியாவில் திபேத்தும் மங்கோலியாவும் ஆகும். குதிரையின் பிறப்பிடம் ஆசியாவின்வடநடுப்பாக மென்றும், அங்கிருந்து அது கிழக்கே சீனமங்கோலிய நாடுகட்கும், மேற்கேஐரோப்பாவிற்கும், தென்மேற்கே பாரசீகம்அரபியா முதலிய நாடு கட்கும், சென்றதாகச்சொல்லப்படுகின்றது. ஒட்டகத்தில், ஒற்றைத் திமிலிக்குஅரபியாவும், இரட்டைத் திமிலிக்குப்பகத்திரியாவும் (Bactria)பிறப்பிடமாகச் சொல்லப் படுகின்றது.
|