பக்கம் எண் :

தமிழர் வரலாறு-165

நிலைப்படை யென்றும், அவ்வப்போது போரின் தேவைக்குத் தக்கவாறு கூலிக்கமர்த்தப்பட்ட படை கூலிப்படை யென்றும்,பெயர்பெற்றன.

காவல் மிகுந்து களவுங் கொள்ளையும்போரும் நீங்கவே, நாட்டில் அமைதியும் இன்பமும்நிலவின. தொழில்கள் பெருகின. வழிப்போக்கும்இடம்பெயர்வும் அச்சம் நீங்கின. வணிகம்வளர்ந்தது. மக்கள் பெருகப் பெருக மெல்ல மெல்லவடக்கே சென்று பரவினர். நாட்டுச் செல்வத்தைமிகுக்கவும், நாகரிக வாழ்க்கைக்கேற்றபொருள்களைத் தொகுக்கவும், காட்டுவழிகளிலெல்லாம் காவற் படையை நிறுவி நிலவாணிகத்தையும், கடற்கரை வளைந்துள்ளஇடங்களிலெல்லாம் துறைநகர்களை யமைத்துநீர்வாணிகத்தையும், வேந்தன் ஊக்கினான்.

ஏற்கெனவே, இயற்கை மொழிக்காலத்திற் பிரிந்து சென்ற மாந்தரினங்கள்ஆப்பிரிக்க ஆத்திரேலிய நிலப்பகுதிகளிலும்,இழைத்தல் மொழியின் அசைநிலைக் காலத்திற்பிரிந்து சென்ற மாந்தரினங்கள் சீன மங்கோலியநிலப்பகுதிகளிலும், கொளுவு நிலைத் தொடக்கக்காலத்திற் பிரிந்து சென்ற மாந்தரினங்கள்மேலையாசிய நிலப்பகுதிகளிலும்,செம்புக்காலத்தில் ஏகார ஓகாரங்கள் குறுகு முன்னும்ள ழ ற ன தோன்றுமுன்னும் பிரிந்து போனமாந்தரினங்கள் வடஇந்தியாவிலும், பெருகிப் பரவிவந்தன. பெருநிலங்களில் வாழ்ந்தவருட் சிலர்அவற்றையடுத்த சிறுநிலங் களான தீவுகளிலுங்குடியேறினர்.

பெருநிலத்தினின்றும் தீர்ந்துநாற்புறமும் நீராற் சூழப்பட் டிருக்கும் சிறுநிலமேதீவாகும்.

தீர் - தீர்வு - தீவு. ஒ.நோ. கோர் -கோர்வை - கோவை. குரு(வு) - கோர் - கோ. தீவு - தீவம்= பெருந்தீவு.

வடமொழியாளர் தீவு என்னுஞ்சொல்லைத் த்வீப என்று திரித்து, இருபக்கம்நீராற் சூழப்பட்டதெனப் பொருட்கரணியங்காட்டுவர். இதன் பொருந்தாமையைக் கண்டுகொள்க.

நிலவணிகத்தார் பாதுகாப்பும்உதவியும் நோக்கி, எப்போதுங் கூட்டமாகவே சென்றுவந்தனர். அக் கூட்டத்திற்குச் சாத்து என்றுபெயர்.

சார்தல் = சேர்தல், கலத்தல், கூடுதல்.

"நல்லெழில் மார்பனைச் சார்ந்து"

(கலித்.142)