பக்கம் எண் :

64தமிழர் வரலாறு-1

நாடாதலால், குளிர்வெண்மதிகுலமுதலாகக் கொள்ளப்பட்டது போலும்!வேப்பந்தாரை யணிந்ததற்கும் கயற்கொடிகொண்டதற்கும் இதுவே கரணியமா யிருக்கலாம்.தாராலும் கொடியாலும் வேம்பன் மீனவன் என்னும்பெயர்களும் எழுந்தன. கயல்மீன் யானைமீனும்பனைமீனும் போலப் பருமீனன்றாதலின், அதைக்கொன்றதனாற் பிடித்த வெற்றிச்சின்னமாகக்கயற்கொடியைக் கருத இடமில்லை. குளிர்ந்தபேரொளி வீசும் முழுமதி போன்றவன், குடிகள்பேரின்பமும் அறிவும் பெற ஆளும் அரசன் என்னுங்கருத்திற் பிடிக்கப்பட்ட மதிவட்டக்குடை அல்லதுவெண்கொற்றக் குடையும் தமிழகத்தின்,சிறப்பாகப் பாண்டிநாட்டின் வெப்ப நிலையைக்குறிப்பாக வுணர்த்தும்.

நண்ணிலக்கோடு குமரிமுனைக்குத்தெற்கிற் பதின் பாகைக்குள் இருப்பதும், இற்றைத்தமிழகத்திலும் வடவாணரினும் தென்வாணர்பெரும்பாலுங் கருத்திருப்பதும், முழுகிப்போனதென்பாண்டி நாட்டின் வெம்மை மிகுதியை யுய்த்துணரஏதுவாகும்.

சோழ பாண்டியர் பாண்டவர்க்குத்துணையாகவும் சேரன் நடுநிலையாகவும்பாரதப்போரிற் கலந்துகொண்டதனாலும், மூவேந்தர்குடிகளும் பாண்டவ கௌரவர்க்கு முன்பே வரலாற்றிற்கெட்டாத் தொன்முது பழங்காலத்தில்தோன்றியமையாலும், பாண்டியன் என்னும் சொல்லைப்பாண்டவன் என்னுஞ் சொல் லினின்று திரிப்பது,வரலாற்றறிவும் ஆராய்ச்சித்திறனும் இல்லாதவர்செயலெனக் கூறி விடுக்க.

இனி, பழையன் என்னும் குறுநிலமன்னன்ஒருவன் பாண்டி நாட்டில் வாழ்ந்து, வேம்பைக்காவல்மரமாக வளர்த்ததையும், பாண்டிய வேந்தரின்பழைமையையும் நோக்கி, பண்டு என்னும்சொல்லினின்று பாண்டியன் என்னுஞ் சொல்லைத்திரிப்பர் சிலர். பாண்டிய வேந்தன் இன்றுதான்நமக்குப் பழைமையானவனேயன்றி, அவன் முதன்முதலாகக்குமரிநாட்டில் தோன்றியபோது ஒருவருக்கும்பழைமையானவன் அல்லன் என்றும், பழையன் என்னுஞ்சொல் ஒருவனது இயற்பெயருக்கே யன்றி, ஓர் ஆள்குடிப்பெயருக்கு ஏற்கா தென்றும், அவர் அறிதல் வேண்டும்.

பாண்டிய வேந்தன் ஐந்திணைநிலங்களையுங் கைப்பற்றி ஆண்டதனால், கருங்கடல்முதல் கருமலைவரை நாடு முழுதுங் காவற்குட்பட்டது.பாலைநிலவாணர் வேந்தனின் படை மறவரா யினர். அந்நிலத் தலைவன் காட்டுப்படைத் தலைவனானான்.ஏற்கெனவே யிருந்தமருதநிலப் படை நாட்டுப்படை யெனப்பட்டது.போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும்நிலையாக விருந்த படை