பக்கம் எண் :

76தமிழர் வரலாறு-1

பெரியனவாகவும் மிகவுயர்ந்தவிலைமதிப்புள்ளனவாகவும் இருந்ததனால், அத்தீவின் ஆட்சி, அடுத்தடுத்து எகிபதியர்க்கும்அசீரியர்க்கும் பீனிசியர்க்கும்கிரேக்கர்க்கும் பாரசீகர்க்கும்,உரோமர்க்கும் தாவிற்று. உரோமர்க்கு வேண்டியசெம்பு ஏறத்தாழ முற்றிலும் அத் தீவினின்றேவந்தது. அதனால் அது 'செப்பறைப் பொன்மணல்' (aescyprium) எனப் பெயர் பெற்றது. அப்பொருளுள்ள இலத்தீனப் பெயர் 'கிப்ரியம்' என்றுகுறுகிப் பின்னர்க் 'குப்ரம்' என்று திரிந்தது. இப்பெயரினின்றே 'காப்பர்’ என்னும் ஆங்கிலச்சொல் வந்தது. இலத்தீனப் பெயரின்முதலீரெழுத்துகளுஞ் சேர்ந்து 'கு' (cu) என்னும் இதளியக் (chemical)குறியமைகின்றது.

"ஆசியாவிற் செம்பும் உறையும்எப்போது முதலிற் பயன் படுத்தப்பட்டன வென்பதுதெரியவில்லை. சு சிங்ஙின் (Shu Ching) பாவியங்கள் (epics)சீனத்தில் கி. மு. 2500-லேயே செம்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றன. ஆயின், அக் கலையின்அற்றை நிலையைப் பற்றியாவது, அப் பொன்னம்அதற்குமுன் பயன்படுத்தப்பட்டதைப் பற்றியாவது,ஒன்றும் அறிதற்கில்லை. கி. மு. 1795-லிருந்து 1122 வரையாண்ட சங்(Shang)ஆள்குடிக்(Dynasty)காலத்திற் செய்யப்பட்டனவும், பேரழகுடையனவும்,உயர்ந்த கலைத்திறனைக் காட்டுவனவுமானஉறைக்கலங்கள் கிடைத்துள்ளன. ஆயினும், இப்பொன்னங்களின் மூலத்தைப்பற்றிய மருமம்,முந்துகாலச் சீனரின் திருக்கல்லறைகளில்என்றென்றைக்கும் பூட்டிவைக்கப்பட்டுள்ளதுபோலும்." பிரித்தானியக் கலைக்களஞ்சியம்.(1970) 6,ப.468

வெண்கலம் திண்மையும் வன்மையும்உடைமையினாலேயே உறையெனப்பட்டது. முறியென்பதும்அப் பொருட்டே. உறத்தல்= செறிதல். உறுதல் =உறுதியாதல். உறைதல்=இறுகுதல். முறத்தல்=விறப்பாதல். முறுகு=திண்மை.

வெள்ளி, பொன்னிற்கு அடுத்தபடியாகஅழகுள்ளதும் விலையுயர்ந்ததும் அணிகலத்திற்குப்பயன்படுவதுமான பொன்ன மாகும். அது பொன்போல்அத்துணையுயர்ந்த தன்றேனும், உலகத்திற்கிடைக்குமளவு மிகக் குறைவாகவேயுள்ளது. ஞாலத்தின்கற்புறணியிற் கிடைக்கும் அரைக்கோடிப் பங்குஇரும்பிற்கு, ஒரு பங்குதான் வெள்ளி கிடைக்கின்றது.

"வெள்ளியின் நடைமுறைப்பயன்பாட்டுத் தொடக்கம், தொன்மைக்குள் மிகத்தொலைவு செல்கின்றது. எனினும், மாந்தன் முதன்முதற்பணிக்குப் பயன்படுத்திய பொன்னங்கள், பொன்னும்செம்புமே யென்று நம்பப்படுகின்றது. கி.மு. 4000 வரை