பழைமையான அரசர் கல்லறைகளில், வெள்ளியணிகலன்களும் சுவடிப்புகளும் காணப்படுகின்றன. கி.மு.3100 போல் எகிபதை ஆண்டதாகக் கருதப்படும் மெனெசின் (Menes)நெறியீட்டுத் தொகுப்பில், ஒரு பங்கு பொன், விலைமதிப்பில் இரண்டரைப் பங்கு வெள்ளிக்குச்சமமென்று தீர்க்கப்பட்டுள்ளது. இதுவே முதற்பொன்னளவைத் திட்டமாக இருக்கலாம். கி.மு. 700ஆம்ஆண்டு, சிந்தாற்றிற்கும் நீலாற்றிற்கும்இடைப்பட்ட எல்லா நாடுகளிலும், பொன்னும்வெள்ளியும் பணமாக வழங்கின என்பது பெரும்பாலும்தேற்றம். உரோமர், தம் காலம்வரை, வெள்ளிப்பணிக்கலையிலும் அறிவியலிலும் வேறெந்நாட்டாரினும் மிகத் தேர்ச்சி பெற்றிருந்திருக்கலாம்." -பிரித்தானியக் கலைக்களஞ்சியம் (1970). 20,ப.536. மேற்காட்டிய மேற்கோட் பகுதிகள்,தமிழறியாதவராற் பெரும் பாலும் மேனாடுகளேபற்றியெழுதப்பட்டவையாதலால், அவற்றுள் தமிழர்வரலாற்றிற்கு ஒவ்வாதன வெல்லாம் அறியாமையின்விளை வென்று கருதியமைக. இற்றையுலகில் மிகப் பெரியவெள்ளிச்சுரங்கம் மெக்சிக் கோவில் (Mexico) உள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகளிலும் (U.S.A.)கானடாவிலும் வெள்ளி பெருவாரியாகக்கிடைக்கின்றது. தென்னமெரிக்காவிலும் வெள்ளிஎடுக்கப்படுகின்றது. முதன்மை யான வெள்ளி யீய நாகமணல்கள் ஆத்திரேலியாவிற் கிடைக் கின்றன.சிற்றளவாக வெள்ளி கிடைக்குமிடங்கள்உலகெங்கும் பரவியுள்ளன. பண்டைத் தமிழகத்தில், வெள்ளிக்கலங்கள் பயன்படுத்தப் பட்டது மட்டுமன்றி,வெள்ளி வேய்ந்த மாடங்களும் அம்பலங்களும்அரண்மனைகளிலும் கோவில்களிலும் அமைந்திருந்தன. "அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில் வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி" | (புறம்.390) | "விளங்கில வந்தி வெள்ளி மாடத் திளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி" | (சிலப் 25:4-5) | "வெள்ளியம் பலத்து நள்ளிருட்கிடந்தேன்" | (சிலப். பதி. 41) |
வெள்ளி சிற்றளவாகக் கிடைத்ததனால்,அரசராலும் பெருஞ் செல்வராலும் அணிவகைப்பொருள்கட்கன்றி, பொது மக்களாற் பல்வகைக்கருவிகள் செய்யப் பயன்படுத்தப்படவில்லை.அதனால், வெள்ளிக்காலம் என ஒரு காலமும்ஏற்படவில்லை.
|