5. இரும்புக்காலம் (Iron Age) (தோரா. கி.மு. 10,000-உலக முடிவு) உறைக்குப் பின் தனிப் பொன்னமாகக்கண்டுபிடிக்கப் பட்டதும், உலகெங்கும் ஏராளமாகக்கிடைப்பதும், எல்லாக் கருவிகளுஞ் செய்தற்கேற்றஉறுதிமிக்கதும், நாகரிகமும் அறிவும் விரைந்துவளர்தற் கேதுவாயிருந்ததும், கரும்பொன் என்னும்இரும்பாகும். அதன் கருமை நிறத்தால்இரும்பெனப்பட்டது. இர்-இரு-இருள். இருமை = கருமை.இரு-இரும்-இரும்பு. E. iron. OE. iren. "அசீரியரும் எகிபதியரும் இரும்பைமிகுதியாகப் பயன் படுத்தினர். திருப்பொத்தகம்,படைப்பியல் (ஆதியாகமம்), 4ஆம் அதிகாரம் 22ஆம்திருமொழியில், தூபால் காயீன் இரும்பு செம்புவினைஞர்க்கெல்லாம் பயிற்றாளனாக இருந்தானென்றுசொல்லப் பட்டுள்ளது. தாவீதின் காலத்திற்கருவிகளும் படைக் கலங்களுஞ் செய்ய இரும்புபயன்படுத்தப்பட்டது. இலக்கியக் கிரேக்கரின்முன்னோடிகளான தோரியப் படையெடுப்பாளர்,இருப்புக் கருவிகளையும் படைக்கலங்களையுங்கொண்டிருந்தார்கள். ஆக்கிலெசிற்கு, அவனதுவல்லுடம் பாண்மைப் பரிசாக ஓர் இருப்புப் பந்துஅளிக்கப்பட்ட செய்தியை ஓமர்குறித்திருக்கின்றார். கிரேக்கர் கருங்கடலின்தென்கரை யினின்றும், உரோமர் இசுப்பானியாவினின்றும் எல்பாவினின்றும் இரும்பைப் பெற்றனர்.தெளிவாக வுள்ளபடி, அதற்கு முந்திய மூலங்கள்இந்தியாவில் இருந்தன." பிரித்தானியக்கலைக்களஞ்சியம் (1970), 12, ப.598 தூபால் காயீன் காலம் கி.மு.3874. கி.மு.1725-ல் கானானியர் இருப்புத்தேர் வைத்திருந்தனர்.1296-ல் கானான் அரசனான யாபீன் 90 இருப்புத்தேர்உடையவனாயிருந்தான். இரும்பு மட்டுமன்றித் தேரும்முதன்முதல் தமிழகத்திலேயே தோன்றியிருத்தல்வேண்டும். தமிழ், உலகில் முதன்முதல் தானேதனியாகத் தோன்றிய மொழியாதலால், நீண்டகாலமாகச் சிறப்புப் பெயரின்றி மொழி என்னும்பொதுப் பெயராலேயே வழங்கி வந்தது. ஓர் ஊரில்ஒரே ஆறிருப்பின், ஆற்றிற்குப் போய் வந்தேன்என்றே சொல்வர். அதுபோல் ஒரே மரமிருப்பின்,மரத்தடிக்குப் போ என்றே சொல்வர். இங்ஙனம்தமிழும் தமிழகத்தில் ஒரே மொழியாயிருந்ததனால்,மொழியென்றே முதலில் வழங்கிற்று. தென்னில மக்கள் வடக்கே சென்றபின்,தட்பவெப்பநிலை சுற்றுச் சார்பு முதலியவற்றின்வேறுபாட்டாலும்,பேச்சுறுப்புகள்
|