பக்கம் எண் :

90தமிழர் வரலாறு-1

சப்புதல் - ஒன்றை மெல்லாது நாவிற்கும்அண்ணத்திற்கும் இடையிலிட்டு நெருக்கி, அதன்சாற்றை மெல்ல மெல்ல
         உறிஞ்சுதல்; அல்லது அப்பொருளைச் சிறிது சிறிதாகக் கரைத்தல்.

சுவைத்தல் - ஒன்றை மென்று அதன் சுவையைநுகர்தல்.

சவைத்தல் - மெல்லிய பொருளைமெல்லுதல், குழந்தை தாய்ப்பாலைச் சப்புதல்.

சூம்புதல் - தித்திப்புக் குச்சும்மூளையெலும்பும் விரலும் சூப்புதல் போன்றவற்றைவாயிலிட்டுச் சப்புதல்.

தின்னுதல் - பழமும் பலகாரமும் போன்றசிற்றுண்டியை மென்று உட்கொள்ளுதல்.

உண்ணுதல் - கவளங் கவளமாகச் சோற்றைஉட்கொள்ளல்.

சாப்பிடுதல் - குழம்பும் சாறும் மோரும்(அல்லது அவற்றுள் ஒன்று) கலந்த சோற்றைக் கவளங்கவளமாகக்
           கறிவகைகளுடன் (அல்லது அவையின்றி)உட்கொள்ளுதல்.

மடுத்தல், - கம்பங்கஞ்சியும் கேழ்வரகுகூழும் போன்ற வாய்மடுத்தல் வற்றைக்கட்டிகட்டியாகக் கூட்டில்
         தொட்டுண்ணுதல், கவளங் கவளமாகப்பிறர்ஊட்டுதல்.

அசைத்தல், - விலங்கு அசையிடுவதுபோல்அலகை யசைத்து அசைவுசெய்தல் மென்றுஉட்கொள்ளுதல்.

அயிலுதல் - குழந்தை அளைந்துசோறுண்ணுதல்.

அயில்-அயின்-அயினி = உணவு.

"தாலி களைந்தன்று மிலனே பால்விட்
டயினியு மின்றயின் றனனே" 

(புறம்.77)

அள்ளல் = நெருக்கம், குழைந்த சேறு.

அள்-(அய்)-அயில். அளிதல் =கலத்தல்,குழைதல்.

அள்-அளாவு. அள்-அளை.

"சிறுகை யளாவிய கூழ்" 

(குறள். 64)

"..................................இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்." 

(நள.கலிதொ.68)