ஒ.நோ:பள்-(பய்) - பயில். பயிலுதல் =பழகுதல். கப்புதல் - மொக்கி விரைந்துஉட்கொள்ளுதல் மொக்குதல் - வாய் நிறையக்கொண்டு மெல்லுதல்."கைத்தல நிறைகனி யப்பமொடவல்பொரி கப்பிய கரிமுக னடிபேணி." | (திருப்பு.விநாயக.1) |
மிசைதல் - விருந்தினரை யுண்பித்துமிஞ்சியதை யுண்ணுதல். "வித்து மிடல்வேண்டுங் கொல்லோவிருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்." | (குறள்.85) |
மொசித்தல் = பலர் கூடி யுண்ணுதல். "விழவின் றாயினும் படுபதம் பிழையாது மையூன் மொசித்த வொக்கலொடு." | (புறம்.96) | "மொய்கொண் மாக்கள் மொசிக்கவூண் சுரந்தனள்" | (மணிமே.19:136) |
மொய்த்தல் = திரளுதல்.மொய்-மொயி-மொசி. மொசிதல் = மொய்த்தல். "கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும்" | (பதிற். 71:6) |
ஆர்தல் - வயிறு நிரம்ப வுண்ணுதல். விழுங்குதல் - மெல்லாதும் சுவை பாராதும் ஒரே தடவையில்விரைந்து வாய்வழி வயிற்றிற்குள் இடுதல். உட்கொள்ளுதல்-எவ்வகையிலேனும் வயிறுசேர்ப்பித்தல். இது எல்லா ஊண்வினைகட்கும்பொதுவாம். கடைக்கழகக் காலத்தில் புலவர் பலர்மரபும் (idiom) தகுதியும் (propriety)போற்றாமையால், பல சொற்கள் தம் சிறப்புப்பொருளை இழந்துவிட்டன. இன்று, குளம்பி(காப்பி)சாப்பிடுதல்,சுருட்டுக் குடித்தல், கொசுவலை, தேட்கடி என்பனமரபுவழுவாம். இவை குளம்பி குடித்தல், சுருட்டுப்பிடித்தல் அல்லது புகைத்தல், உலங்கு வலை அல்லதுநுளம்புவலை, தேட்கொட்டு என்றிருத்தல் வேண்டும்.சம்பளத்தை (salary)ஊதியம் (profit, gain)என்பதும் வழுவாம். இலக்கணப் புலமை நிரம்பாதவர்நூலாசிரியரும் பொத்தக ஆசிரியரும் ஆவதனாலும் மரபுகெடுகின்றது.
|