பக்கம் எண் :

தமிழர் வரலாறு-195

இலக்கியம் முழுதும் செய்யுளாகவேஇருந்ததனால், இலக்கிய வழக்கு செய்யுள்வழக்கெனப்பட்டது. எல்லாப் புலவரும் பாவலராயிருந்ததனால், பாவலர் எனப்படாது புலவர் என்றேபெயர் பெற்றனர். அவர் இக் காலத்துப் பாவலர்போல், ஏடும் எழுதுகோலும் எடுத்து ஓரிடத் தமர்ந்துஎண்ணியெண்ணி அடித்துந் திருத்தியும் செய்யுளியற்றாது, உரைநடையிற் பேசுவதுபோல், எங்கும்என்றும் எப்பொருளும்பற்றிக் கடுத்துப்பாடியவராவர். ஆசிரியரும் அறிவுறுத்துவோரும்கணியரும் ஆகிய கல்வித் தொழிலாளர் மட்டுமன்றிஉழவர், வணிகர், மருத்துவர், கொல்லர் முதலியபல்வகைப் பிற தொழிலாளரும், குறிஞ்சிநிலத்துக்குறவரும், பாலைநிலத்துக் கள்ளர் மறவரும்,முல்லைநிலத்து ஆயரும், நெய்தல்நிலத்துப் பரவரும்ஆகியவருள்ளும் சிலர் பாவலரா யிருந்தனர்.அதனாலேயே, தலைக்கழகத்துப் புலவர் ஐந்நூற்றுநாற்பத்தொன்பதின்மர் உள்ளிட்டு, நாலாயிரத்துநானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினர்.

இலக்கணம்

தமிழில் இலக்கண முதனூல் இயற்றியவர்,முற்றத் துறந்து முழுமுனிவரான ஒருமெய்ப்பொருளறிஞர்.

"வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூல் ஆகும்." 

(தொல்.1594)

முனைதல் = வெறுத்தல். முனை - முனைவு -முனைவன். முனிதல் = வெறுத்தல். முனி - முனிவு - முனிவன்- உலகை வெறுத்துப் பற்றைத் துறந்தவன்.

எழுத்து

முதனூலாசிரியர் ஒரு சிறந்தமெய்ப்பொருளறிஞரா யிருந்த தனாலேயே, உயிரும்மெய்யும் உயிர்மெய்யும் (உயிரியும்) போன்றுஎழுத்தொலிகள் மூவகைப்பட்டிருத்தலைக் கண்டு,முப்பொருட் பெயர்களையே எழுத்தொலிகட்கும்உவமையாகுபெயராக இட்டிருக்கின்றார். தானாகஇயங்கும் உயிரைப் போன்று தானாக வொலிக்கும்உயிரெழுத்தும்; உயிரின் சேர்க்கையின்றித்தானாக வொலிக்காத மெய்யெழுத்தும்; உயிரொடுசேர்ந்த வுடம்பு அதனால் இயக்கப்பட்டு அதனொடுஒன்றி அதனினும் முற்பட்டுத் தோன்றும் உயிர்மெய்போன்று, உயிரெழுத்தொடு சேர்ந்த மெய்யெழுத்துஒலிக்கப்பட்டு அதனொடு ஒன்றி அதனினும்முற்பட்டுத் தோன்றும் உயிர்மெய்யெழுத்தும்இருத்தலைக் காண்க. உயிர்மெய்