கூலிக்காரன் முதல் கோமகன்வரைஎந்நிலையராயினும் எத்தொழிலராயினும்,மக்களையெல்லாம் ஆண்டு நடத்தும் குணம் இரண்டு. அவைகாதலும் மறமும். மக்களெல்லாரும் ஆடவரும்பெண்டிருமாகப் படைக்கப்பட்டிருப்பதால், காதல்வாழ்க்கை மாபெரும்பாலர்க்குஇன்றியமையாததாகும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையாதலால், ஒரு தொழிலை மேற்கொள்வதுஎல்லார்க்கும் இன்றியமையாதது. எத் தொழிலிலும்போட்டி தொன்றுதொட்டுச் சிற்றளவாகவோபேரளவாகவோ இருந்தே வந்திருக்கின்றது. எதிரிகளைவென்று வாழ்க்கையைத் திறம்பட நடத்த மறமும்இன்றியமையாதது. இனி, ஒரே பெண்ணைப் பலர் மணக்கவிரும்பும்போது, காதலிலேயே மறமுங் கலக்கின்றது. இவ்விரு குணங்களுள்ளும் அல்லதுகுணவாழ்க்கையுள்ளும், உள்ளத்திற்கு மிகநெருங்கியது காதலே. ஆதலால் அதை அகம் என்றார்.அகமல்லாதது புறமாதலின் மறத்தைப் புறம் என்றார்.இங்ஙனம் இரண்டையும் வேறுபடுத்திக் கூறினும், அவைஅகப்பகையும் புறப்பகையும் போலப் பிரிந்துநில்லாது, அகங்கையும் புறங்கையும்போல ஒன்றியேநிற்கும். தமிழனுக்குத் தமிழ் அகம்; திரவிடம்அகப்புறம்; ஆரியம் புறம்; சேமியம் புறப்புறம்.இவ்வகைக் கூற்றினின்று, அகம் புறம் என்னும்சொற்களின் பொருளை ஒருவாறுணரலாம். அரசன் எல்லார்க்குந் தலைமையாகவும்பொதுவாகவும் எல்லாரையுந் தன்னுளடக்கியும்நிற்பதால், அரசனுக்குச் சொன்னது அனைவர்க்குஞ்சொன்னதாகு மென்றும், காதல் வாழ்க்கையிலும்மறவாழ்க்கையிலும் தலைசிறந்த நுகர்ச்சியும்பட்டறிவும் அரசனுக்கே யுண்டென்றுங் கண்டு, ஓர்இளவரசனையே காதலனாகவும் ஓர் இளவரசியையேகாதலியாகவுங் கொண்டு, அகப்பொருளிலக்கணம்வகுக்கப்பட்டுள்ளது. இது புலனெறி வழக்கம் எனத்தமிழுக்கே சிறந்த மரபாகும். ஆயினும், இது நாடகவழக்கமும் உலகியல் வழக்கமும் கலந்ததாதலால்,சிறுபான்மை பொதுமக்கள் காதல் வாழ்க்கையும்ஆங்காங்குக் கூறப்பெறும். அகப்பொருள் என்னும் காதல் அல்லதுமணவாழ்க்கை, கைக்கிளை (ஒருதலைக் காமம்),ஐந்திணை (இருதலைக் காமம்), பெருந்திணை(பொருந்தாக் காமம்) என மூவகையாக வகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள், எல்லாவகையிலும் நல்லதெனஒப்புக் கொள்ளப்பட்ட இருதலைக் காமம் புணர்தல்,பிரிதல், இருத்தல்,
|