முன்னுரை
1. வரலாற்றின் பயன்
கலைகளும் (Arts)
அறிவியங்களும் (Sciences)
(1) தற்சார் புள்ளது (Independent),
(2) மற்சார்புள்ளது (Dependent)என இருதிறப்படும். தற்சார் பறிவியங்களுள்
ஒன்றான வரலாறு, ஏனை யறிவியங்கட் கெல்லாம்
அடிமணையாயும் முதுகந்தண்டாயும் இருப்பதாகும்.
ஒவ்வொரு துறையிலும், தொடக்கந் தொட்டுவரும்
ஆசிரியரின் அல்லது அறிஞரின் வரலாற்று
முறைப்பட்ட அறிவுத் தொகுதியே ஒரு கலை அல்லது
அறிவியம்.
காட்சியும் கருத்துமாகிய ஒவ்வொரு
பொருட்கும் வரலாறி ருப்பினும், ஒரு நாடு, அதன்
மக்கள், அவர்கள் மொழி, அவர்கள் நாகரிகம்
ஆகிய சிலவற்றின் வரலாறே சிறப்பாக
வரலாறெனப்படும்.
ஒரு நாட்டு வரலாறு அந் நாட்டின் பழங்குடி
மக்களை யும் வந்தேறிகளையும் (Immigrants)
பிரித்துக் காட்டுவதால், ஒரு வீட்டுக் காரனுக்கு
அவ் வீட்டு ஆவணம் ஏமக்காப்பாவது போல், ஒரு
நாட்டுப் பழங்குடி மக்கட்கும் அந் நாட்டு வரலாறு
சில வுரிமை வகையில் ஏமக்காப்பாம்.
இனி, வரலாறன்றி ஒரு மொழியின்
உண்மையான இயல்பை அறிவதும் அரிதாம்.
2. மொழிநூலின் முதன்மை
ஒரு நாட்டு வரலாறு (1) எழுதப்பட்ட வரலாறு
(Written History),
(2) எழுதப்படா வரலாறு (Unwritten
History) என இருதிறப்படும்.
கிறித்துவிற்குப் பிற்பட்ட நாடாயின்,
பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும்; முற்பட்டதாயின்,
எழுதப்பட்டோ படாதோ இருக்கும். எழுதப்படா வரலாறு,
(1)அறியப்பட்ட வரலாறு (Known
History), (2) அறியப்படா வரலாறு (Unknown
History) என இரு திறத்தது. வரலாற்றுக்
குறிப்புகளும் கருவிகளும் சான்றுகளும் போதிய அளவு
இருப்பின், அறியப்படும்; இன்றேல் இல்லை. இனி,
எழுதப்பட்ட வரலாறும், (1) மெய் வரலாறு (True
History), பொய் வரலாறு (False
History) என இரு வகைத்து.
|