சொல்
|
பொதுப்பொருள்
|
சிறப்புப்பொருள்
|
அடியார் பேறு(காலம்)
நெய்
மலர்(அடி) |
பல்வேறு அடியார்
பல்வகைப்பேறு
பல்வகை நெய்
பல்வேறு மலர் |
இறைவனடியார்
மக்கட்பேறு
ஆவின் நெய்
தாமரைமலர் |
மக்கட்பேறு இல்லற
வாழ்க்கையிற் சிறந்த பேறாகக் கருதப் பட்டமை,
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற" (குறள். 61)
என்னுந் திருக்குறளா லறிக. பெற்றோர்
= சிறந்த பேறுபெற்ற தாய் தந்தையர்.
புலாலுண்பார் கறி என்னும் சொல்லாற்
புலாலைக் குறித்தலும் சிறப்பிக்கையே.
(5) பொதுப்பிக்கை (Generalisation)
சிறப்புப் பொருட்சொல்லைப்
பொதுப்பொருளில் ஆள்வது பொதுப்பிக்கையாம். இது
சிறப்பிக்கையின் மறுதலை.
சொல்
|
சிறப்புப்பெயர்
|
பொதுப்பொருள்
|
எலி
தாமரை
தூங்குதல்
|
வெள்ளெலி
செந்தாமரை
தொங்குகட்டிலில்
அல்லது தொட்டிலில்
உறங்குதல் |
எலி
தாமரை
உறங்குதல்
|
பொருட்பெருக்கமும் பொருளிழப்பும்
ஒரு கருத்தினின்று வேறொரு கருத்துத்
தோன்றுவதால், பொதுவாகச் சொற்களின்
பொருள்கள் இரண்டும் பலவுமாகப் பெருகுவதுண்டு.
ஏதேனுமொரு சிறப்புப்பொருள் குறித்த அடைபெற்ற
சொல்லைப் பொதுப்பொருளில் வழங்கின், அச்
சிறப்புப் பொருளடை தன் பொருளை இழந்துவிடும்.
எ-டு:
பொருட்பெருக்கம்:
காளை = எருது, மறவோன்.
திரு = செல்வம், அழகு,
தெய்வத்தன்மை.
|