பள்ளி = படுக்கை,
படுக்கையறை, வீடு, கோயில், கல்விச்சாலை.
பொருளிழப்பு:
அடைபெற்றசொல்
|
சிறப்புப்பொருள்
|
பொதுப்பொருள்
|
எண்ணெய்
தமப்பன்(தகப்பன்)
தண்ணீர்
|
எள்ளின்நெய்
தம் அப்பன்
குளிர்ந்த நீர் |
நெய்ப்பொருள்
அப்பன்
நீர் |
(2) சொற்றொடராக்கம் (தோரா. கி.மு. 25,000)
தொடரியம் என்னும் முற்றுச்
சொற்றொடர், இக்காலத்திற் போன்றே
முதற்காலத்திலும் (எழுவாய் பயனிலையென்னும்)
ஈருறுப்புகளையோ, (அவற்றொடு செயப்படுபொருளும்
சேர்ந்த) மூவுறுப்பு களையோ கொண்டிருத்தல்
வேண்டும். ஆயின், அவை ஈறும் இடைநிலையுமற்ற
பகாச்சொற்களாகவே யிருந்திருக்கும். அறி என்பது
அறிவு என்றும், கெடு என்பது கேடு என்றும், செய்
என்பது செய்கை யென்றும், இன்றும் பொருள்படுதல்
காண்க.
"அறிகொன் றறியா னெனினும்" (குறள்.
638)
"கெடுவின்று மறங்கெழு சோழர்" (புறம். 39:7)
"களிறு களம்படுத்த பெருஞ்செய்
யாடவர்" (நெடு.
171)
அடி, விழி, தள், சொல் முதலிய
எத்துணையோ வினை யடிகள், இன்றும் உலக வழக்கிற்
பெயராகவும் வழங்குகின்றன. சில மலையாளப்
பழமொழிகளில் நல் (நல்லு) என்னும் பண்படி நன்று
என்று பொருள்படுகின்றது. உண்டு இல்லை என்பனவும்,
இவை போன்ற பிறவும், இன்றும் முக்காலத்திற்கும்
பொதுவாம். குறிப்பு வினைகள் முன்பின் வரும்
சொற்றுணைகொண்டு இக்காலத் தில் ஒரு காலத்தை
உணர்த்துதல் போன்றே, தெரிநிலை வினையடி களும்
முதற்காலத்தில் உணர்த்தியிருத்தல் வேண்டும்.
பண்டைத் தமிழிலக்கியமெல்லாம்
செய்யுள் வடிவாகவே யிருப்பினும், பொதுமக்கள்
பேச்சு என்றும் உரைநடையே யென்பதை மறந்துவிடல்
கூடாது.
ii செய்யுள் நடை (தோரா. கி.மு. 15,000)
தமிழ மாந்தர் நீண்ட காலமாக
உரைநடையிலேயே பேசிவந்த பின், மதி
விளக்கத்தாலும் உணர்வெழுச்சியாலும் தூண்டப்பட்டு
தெய்வப்பற்று, காதல், போர், வாழ்த்து, கதை,
வரலாறு முதலிய பல பொருள்கள்பற்றி, எளியநடையில்
தென்பாங்கும் சிந்தும் போன்ற இசைப்பாட்டுகளும்,
அகவலும் வெண்கலிப்பாவும் இராமப்பய்யன்
|