பக்கம் எண் :

இயனிலைப் படலம்111

எ-டு: வள்-வய்-வயிர்-வயிரம்-வைரம்.

ஓரிரு சொன்முதலில் வரும் அகர உகரம் ஒளகாரமாகவும் எழுதப்பெறும்.

எ-டு: கதுவாலி (= குறுகிய வாலையுடைய பறவையினம்)- கவுதாரி (இலக்கணப்போலி)-கௌதாரி.

இனி, அகரத்தையடுத்த யகரமெய்யும் எல்லாவிடத்தும் ஐகார மாகவே எழுதப்பெறும்.

"அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்." (தொல். 56)

எ-டு: வள் (=கூர்மை)-(வய்)-வை = கூர்மை. ளகர மெய் யகர மெய்யாகத் திரிவது பெருவழக்கு.

எ-டு: கொள்-கோள்-கோய், தொள்-தொய், நொள்- நொய், பிள்-பிய், மாள்-மாய், வெள்-வெய்- வெய்யோன் = விரும்புகின்றோன். வெய்- வெய்ம்மை-வெம்மை=விருப்பம்.

"வெம்மை வேண்டல்." (தொல். உரி. 36)

யகர மெய்யீற்று ஒகர முதற்சொல் ஈரெழுத்துச் சொல்லா யிருந்து அகர முதலாய் மாறின், ஐகார வடிவு பெறும்.

எ-டு: பொள்-பொய் (உட்டுளை)-(பய்)-பை,

அகரத்தை யடுத்த வகரமெய், ஒரு சில சொற்களில் ஒளகார மாகவும் எழுதப்பெறும்.

எ-டு: அவ்வியம்-ஒளவியம், கவ்வு-கௌவு, வவ்வால் - வௌவால்

ஒளவை என்னும் சொல் அவ்வை என்பதன் திரிபேயா யினும், ஒரு புலத்தியாரின் இயற்பெயராதலின், ஒளகார முதலதாகவே எழுதப்படல் வேண்டும்.

அம்மை-அவ்வை-ஒளவை.

அவ், அவ்வாறு, சவ்வு, தவ்வு முதலிய சில சொற்களில், அகரமடுத்த வகரமெய் ஒளகாரவீறாக எழுதப்படுவதே யில்லை. ஆயின், அய் என்னும் வடிவம் "அய்" என்னும் அசையைக் குறித்தாலன்றி, எழுத்துத்தமிழில் நிகழ்தற்கு இடமேயில்லை. இதை நோக்கிப்போலும்,