உயிர் தோன்றிய முறை
முதல் தோன்றியவை:
இடைத்தொன்றியவை: .
கடைத்தோன்றியவை
: . |
நெடில்-ஆ, ஈ,
ஊநெடில்-ஏ, ஓ
குறில்-அ, இ, உ
நெடில்-ஐ, ஒள
குறில்-எ, ஒ |
உயிர்களுள், நெடில் முன்பும் குறில்
பின்பும் தோன்றின. இங்ஙனங் கொள்வதற்கு
ஏதுக்கள் முன்னர்க் கூறப்பட்டன. முதலில்
தோன்றிய மூவுயிரும், முறையே, சேய்மை யண்மை
முன்மைச் சுட்டுகளாகவே தோன்றின.
அண்மைச் சுட்டினும் முன்மைச் சுட்டு
பிந்தியதாதலாலும், சற்று மிகுந்த முயற்சி
வேண்டுதலானும், ஈகாரம் ஊகாரத்திற்கு
முந்தியதாதல் வேண்டும்.
இகர ஈகாரத்தின் மோனையாக எகர
ஏகாரமும், உகர ஊகாரத்தின் மோனையாக ஒகர
ஓகாரமும் தோன்றுதலானும்; கொச்சை வழக்கில்
இடம் என்பது எடம் என்றும், உனக்கு என்பது ஒனக்கு
என்றும், இகரம் எகரமாகவும் உகரம் ஒகரமாகவும்
ஒலிப்பதாலும், அண்மைச் சுட்டி லிருந்தே எகர
ஏகாரமும், முன்மைச் சுட்டிலிருந்தே ஒகர ஓகாரமும்
தோன்றியிருத்தல் வேண்டும்.
அளபு வகையில்,
"ஆஈ ஊஏ ஐஓ ஒளஎ(ன்)னும்
அப்பால் ஏழும்
ஈரள பிசைக்கும் நெட்டெழுத்
தென்ப"
என்றும், அமைப்பு வகையில்,
"அகர இகரம் ஐகார மாகும்." (54)
"அகர உகரம் ஒளகார மாகும்" (55)
என்றும், தொல்காப்பியங் கூறுவதால்,
அகர இகரம் சேர்ந்து ஐகாரமும் அகரவுகரம் சேர்ந்து
ஒளகாரமும் புணரொலிகளாய்த் (diphthongs)
தோன்றினவென அறியலாம். இகரம் உகரத்தினும்
முந்திய தாதலின், இகரக் கூறுள்ள ஐகாரம் உகரக்
கூறுள்ள ஒளகாரத்தினும் முந்தித்
தோன்றியிருத்தல் வேண்டும்,
வடநூலார் புணர்ச்சித் திரிபைப்
பற்றுக்கோடாகக் கொண்டு, ஏகார ஓகாரங்களையும்
புணரொலிகளாகக் கொள்வர். அக் கொள்கை
தமிழுக்கு ஏற்காது. முற்கூறியவாறு, அவை மோனைத்
திரிபாய் எழுந்தவையே.
ஓரிரு சொன்முதலில் வரும் அகர இகரம்
ஐகாரமாகவும் எழுதப் பெறும்.
|