பக்கம் எண் :

122தமிழ் வரலாறு

(3) பட்டயவெழுத்து வட்டமாயிராமை. வட்டெழுத்து என்பது வடிவுபற்றியதாயின், அது ஏட்டெழுத்திற்கே (கிரந்த வடிவெழுத்திற்கே) பொருந்துவதாகும்.

(4) ஏட்டிற்கு வளைகோட்டெழுத்தும் பட்டயத்திற்கு நேர் கோட்டெழுத்துமே இசைவாயிருத்தல்.

(5) தமிழெழுத்து அசோகக் கல்வெட்டிற்கும் வடமொழி வரவிற்கும் முந்தியதாதல்.

(6) வடமொழி நெடுங்கணக்கு தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றியே அமைத்திருத்தல்.

(7) மேனாடுகளிலும் கருவிக்கேற்ப எழுத்துவடிவு வேறுபட் டிருந்தமை.

இந்திய நாகரிகம் ஆரியரதென்றும், தமிழ் எல்லா வகையிலும் வடமொழியைப் பின்பற்றியதென்றும், மேலை யறிஞர் குருட்டுத்தனமாகக் கொண்டிருந்த அடிப்படைத் தவறுகளே, தமிழெழுத்துப் பிராமியினின்று திரிந்ததென்று கொள்ளற் கிடந்தந்தன.

பண்டையெழுத்து வடிவங்களிற் சில இன்று மாறி யுள்ளன. அவை வருமாறு:

எழுத்தின் பெயர் பண்டைவடிவம் இற்றை வடிவம்
ஈகாரம்
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
எகரம்
ஏகாரம்
ஒகரம்
ஓகாரம்
மகரம்

வீடியாங்கு
வீடு
எ, கெ
எ, கெ
ஒ,கொ
ஒ, கொ
ப்

வீடியாங்கு
வீடு
எ, கெ
ஏ, கே
ஒ. கொ
ஓ, கோ

எகர ஒகரக் குறில்கள் அவற்றின் நெடில்கட்குப் பிந்தித் தோன்றியமையால், அவற்றை வேறுபடுத்திக்காட்ட அவற்றின் மேற் புள்ளியிடப்பட்டது. வட இந்திய மொழிகளைப் பேசுவோரின் முன்னோர், எகர ஒகரக் குறில்கள் தமிழில் தோன்றுமுன் குமரிக்கண்டத்தினின்று வடக்கே சென்றதினாலேயே, அம் மொழிகளில் இன்றும் அக் குறில்கள் இல்லை. அம் மொழிகளின் மூலமாகிய பிராகிருதங்களை வேத ஆரியர் பேசினதினாலேயே, அவர் வேதத்திலும் அவை இல்லை.