எ-டு.
|
பிறமொழிச்சொல்
|
தமிழ்ச்சொல்
|
|
நியூயார்க்
யூரொப
டேனிஷ்
|
நியூயார்க்கு
ஐரோப்பா
தேனியம் |
தனிச்சொல்லின் முதலில் மெய்யும்,
இடையிற் சில மெய்ம் மயக்கமும், இறுதியில்
வல்லின மெய்யும், வரக்கூடாதென்று விலக்கியது,
பண்டைத்தமிழரின் மெல்லொலி வாயியல்பு
பற்றியது மட்டுமன்று; எதிர்காலத் தமிழரின்
வாழ்நாள் நீடிக்குமாறு, இயன்றவரை மொழியொலிப்பு
முயற்சியைக் குறைக்கவேண்டு மென்னுங்
குறிக்கோளுங் கொண்டதாகும்.
விழுத்தம் (Accent)
ஒரு சொல்லின் ஓர் அசையில் விழும்
ஒலியுறைப்பு விழுத்தம் எனப்படும். தமிழில்
விழுத்தம் (1) இயல்பு விழுத்தம், (2) சொற்
பிரிவிழுத்தம், (3) சொல்வகை விழுத்தம் என
மூவகைப்படும்.
(1) இயல்பு விழுத்தம்
இயல்பு விழுத்தம் இயல்பாக நிகழ்வது.
அது என்றும் சொல்லின் முதலில் விழும்.
எ-டு: கொற்றன், வந்தான்.
ஒலியுறைப்பு வரவரக் குறையுமாதலால்,
சொன்முதலில் எடுத்தலும் (Acute),
இடையில் நலிதலும் (Circumflex)
இறுதியிற் படுத்தலும் (Grave),
நிகழும்.
ஈருயிர்ச் சொல்லாயின், எடுத்தலும்
படுத்தலும் மட்டும் நிகழும்.
எ-டு: வந்தான், மகன்
(2) சொற்பிரி விழுத்தம்
இது ஒரு கவர்படு பொருண்மொழியில்
(பல்பொருட் சொற் றொடரில்), சொல்வான்
கருத்திற்கேற்ப ஏதேனும் ஒரு சொன் முதலில்
நிகழும்.
எ-டு: செம்பொன்பதின்பலம்
= செம்பு ஒன்பது பலம்
செம்பொன்பதின் பலம்
= செம்பொன் பதின்பலம்
குன்றேறாமா
= குன்றேறு ஆமா
குன்றேறாமா
= குன்றேறா மா
|