தெரியாத
அருஞ்சொற்களைத் தொகுத்துப் பொருள் உரைத்துக்
கொண்டனர். இதன் விளக்கம் பின்னர்க் காண்க.
(1) பெயர்ச்சொல்
ஒரு பொருளின் பெயரே பெயர்ச்சொல்.
பெய்வது பெயர்; பெய்தல் - இடுதல். பெயரிடுதல்
என்னும் வழக்கை நோக்குக.
பெயர்ச்சொல் பொருள், இடம், காலம்,
சினை, குணம், தொழில் என்னும் அறுபொருள்பற்றி,
அறுவகைப்படும்; இருதிணைபற்றி, உயர்திணை, அஃறிணை,
விரவுத்திணை என மூவகைப்படும்; மூவிடம் பற்றி,
தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும். சினை
= உறுப்பு.
இருதிணைக்கும் பொதுவான பெயர்
விரவுத்திணைப் பெயர் அல்லது விரவுப்பெயர்
எனப்படும்.
எ-டு: ஆண், பெண், தாய், பிள்ளை.
தன்மை முன்னிலைப்பெயர்கள்,
எண்பற்றி ஒருமை பன்மை என இருவகைப்படும்.
படர்க்கைப் பெயர்கள், பால்பற்றி ஆண்பால்,
பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
என ஐவகைப்படும்.
1. மூவிடப் பகரப்பெயர் (Personal
Pronouns)
தன்மைப்பெயர்:
|
ஒருமை
|
பன்மை
|
இரட்டைப்பன்மை
|
முதல்நிலை
2ஆம் நிலை
3ஆம் நிலை
|
ஏன்
யான்
நான் |
ஏம்
யாம்
நாம் |
ஏங்கள்
யாங்கள்
நாங்கள் |
தன்மைப் பெயரின் வேற்றுமை யடிகள்
ஏன்
யான் - என்
நான்-நன்
|
ஏம்
யாம் -எம்
நாம்-நம்
|
ஏங்கள்
யாங்கள்-எங்கள்
நாங்கள்-நங்கள் |
யாங்கள் என்னும் தனித்தன்மைப்
பன்மைப் பெயர் வழக்கற்றுப் போனதினால், இன்று
அதன் இடத்தில் நாங்கள் என்னும் உளப்பாட்டுத்
தன்மைப் பன்மைப்பெயர் தன் உளப்பாட்டுப்
பொருளையிழந்து வழங்குகின்றது.
ஏ என்பது உயர்ச்சி குறித்தலால்,
இயல்பாக மாந்தனுக்குள்ள நான் என்னும் செருக்கு
அல்லது தன்னலம்பற்றி, அதை அடியாகக்
|