பக்கம் எண் :

134தமிழ் வரலாறு

கொண்டு தன்மைப் பெயர்கள் தோன்றியிருக்கலாம். வடமொழி யிலக்கணியர் தன்மையிடத்தை உத்தம புருடன் என்றும், ஆங்கிலர் அதனை First - Person என்றும் குறித்ததையும் நோக்குக.

"ஏபெற் றாகும்." (தொல். உரி. 7)

எக்கு, எட்டு, எண், எம்பு, எவ்வு, எழு, ஏண், ஏந்து, ஏர், ஏறு முதலிய சொற்களில் எகர ஏகாரம் உயர்ச்சி குறித்தல் காண்க.

இன்று வழக்கிலில்லாத வடிவங்களெல்லாம் பண்டைத் தமிழில் வழங்கினவென அறிக.

முன்னிலைப் பெயர்: ஒருமை பன்மை இரட்டைப்பன்மை

முதல்நிலை
2ஆம் நிலை
3ஆம் நிலை
4ஆம் நிலை

ஊன்)
(நூன்)
நீன்
நீ
(ஊம்)
(நூம்)
நீம் நீயிர்
(நீ + இர்)
(ஊங்கள்)
(நூங்கள்)
நீங்கள்
நீங்கள்

பிறைக்கோட்டிலுள்ளவை வழக்கு வீழ்ந்தன.

நீ என்பது நீன் என்பதன் கடைக்குறை. அது இர் ஈறுபெற்று நீயிர் என்றாகிப் பின்பு நீவிர் எனத் திரிந்து, நீர் எனத் தொக்கது.

நீன், நீம் என்னும் வடிவங்கள் இன்றும் நெல்லை வட்டா ரத்தில் வழங்குகின்றன.

முன்னிலைப் பெயரின் வேற்றுமை யடிகள்

(ஊன்) -உன்
(நூன்)-(நுன்)
நீன்-நின்
(ஊம்)-உம்
(நூம்) -நும்
நீம்-(நிம்)
(ஊங்கள்)-உங்கள்
(நூங்கள்)-நுங்கள்
நீங்கள்-(நிங்கள்)

இன்று 4ஆம் நிலை எழுவாய் வடிவங்கட்கும் முதல்நிலை வேற்றுமை யடிகளே வழங்குகின்றன.

முன்னிலைப் பெயர்கள் ஊ என்னும் முன்மைச் சுட்டடியாய்த் தோன்றியுள்ளன.

முதற்காலப் படர்க்கைச் சுட்டுப்பெயர்

ஒருமை பன்மை இரட்டைப்பன்மை
முதல்நிலை (ஆன்)
2ஆம் நிலை தான்
(ஆம்)
தாம்
(ஆங்கள்)
தாங்கள்

படர்க்கைப் பெயரின் வேற்றுமையடிகள்