பக்கம் எண் :

140தமிழ் வரலாறு

பெண்பால்:
.
.
.
பெண், பெண்டு,
பெண்டாட்டி, பெண்
பிள்ளை, மகள்,மகடூஉ,
மாந்தை

அளகு, ஆன், ஆ, ஆவு),
கடமை, கடாரி (கிடேரி),
நாகு, பாட்டி, பிடி, பிணா-
பிணவு பிணவல், பிணை,
பெண் பெட்டை,பெடை,
பேடை, மந்தி, மறி, மூடு.
திரிபால்:
.
.
.
.
.
.
ஆண்டன்மை மிக்க பெண் - பேடன்
பெண்டன்மை மிக்க ஆண் - பேடி
இரண்டிற்கும் பொதுப்பெயர் -பேடு
ஆணும் பெண்ணும் அல்லாதது -
அலி, அழிதூஉ
ஆண் தோற்றமுள்ள அலி - ஆணலி
பெண் தோற்றமுள்ள அலி - பெண்ணலி

இளமைப்பெயர், முதுமைப்பெயர்

இளமைப்பெயர்: உயர்திணை அஃறிணை

மக-மகவு, குழவி,
குழகு, குழந்தை,
சேய், மழ-மழவு,
மதலை, புதல்வு,
பிள்ளை, (குட்டி)

கசளி, கயந்தலை, கரு,கருந்து, களவு-களவம்,கன்று, குஞ்சு, குட்டி,குருமன், குருளை, குழவி,செள்,சேய், நவ்வி, நாகு,நாற்று, பறழ், பார்ப்பு,
பிள்ளை,பொடி,போக்கு,
போந்து- போந்தை,மடலி-
வடலி, முனி
முதுமைப்பெயர்:

கிழவன் - கிழவி
முதியன் - முதியள்
முதுமகன்-முதுமகள்
கிழம். கிழடு, கெட்டை, மூரி

முறைப்பெயர் (Names of Relationship)

தந்தை-அப்பன் (தமப்பன்-தகப்பன்), அத்தன்-அச்சன், ஆஞான்-ஆஞி, ஐயன், தா, நாயன்.

தாய்-அம்மை-அவ்வை, அன்னை-அஞ்ஞை, அத்தி-ஆத்தி- ஆத்தை, அச்சி-ஆச்சி, ஐயை, ஆய், தள்ளை.

மகன்-புதல்வன்.

மகள்-புதல்வி.

மக (பொது)-மகவு, பிள்ளை, சேய், மதலை, கான்முளை (ஒருமை); மக்கள் (பன்மை).

அண்ணன்-ஐயன் (தமையன்), ஆயான், அண்ணாட்சி (அண்ணாத்தை), அண்ணாள்வி, தம்முன், மூத்தோன், முன்னோன்.