பக்கம் எண் :

இயனிலைப் படலம்139

ஐம்பாற்பெயர்

ஆண்பால், பெண்பால், பலர்பால் என உயர்திணைப்பால் மூன்றும், ஒன்றன்பால், பலவின்பால் என அஃறிணைப்பால் இரண்டும் ஆகப் பால் ஐந்தாம்.

பகு-பகல்-பால் = பிரிவு.

ஆண்பால், பெண்பால் என்னும் இரண்டும் ஒருமைப் பால்கள். ஆண்பெண் வேறுபாடு அஃறிணை யுயிரிகளுள்ளும் இருப்பினும், முதனூலாசிரியன் அதற்கு இலக்கணத்தில் இடந் தரவில்லை. ஏனெனின், மொழியை அமைத்த பொதுமக்களே அங்ஙனம் அமைத்துவிட்டனர். "இலக்கியங் கண்டதற் இலக்கணம்" இயம்புதலே நூலாசிரியன் செயல்.

குமரிக்கண்டப் பொதுமக்கள் கூர்மதியும் உயரிய ஒழுக்கமும் உடையராதலின், நல்லதைக் கடைப்பிடித்துத் தீயதை நீக்கும் நாகரிகப் பண்பாட்டிற்கு இன்றியமையாத பகுத்தறிவை அளவையாகக் கொண்டு, அதையுடைய மக்களை உயர்திணை யென்றும், அஃதில்லாதவற்றை யெல்லாம் உயிரிருப்பினும் இல்லாவிடினும் அஃறிணை யென்றும் வகுத்து, அதற்கேற்ப, மகன் வருகிறான், மகள் வருகிறாள் என்று உயர்திணையிற் பால் பிரித்தும், காளை வருகிறது, ஆவு வருகிறது என்று அஃறிணையிற்பால் பிரிக்காதும், எல்லாப் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற் களையும் அமைத்து விட்டமை, என்றும் தமிழன் எண்ணி மகிழ்தற்கும் தன் முன்னோரைப்பற்றிப் பெருமை பாராட்டுதற்கும் உரிய தொன்றாம். இங்ஙனம் வேறெம் மொழியிலு மில்லாத சிறந்த இலக்கணவமைப்பு, இற்றைப் புல மக்களினும் அற்றைப் பொது மக்கள் அறிவாற்றலிலும் நாகரிகப் பண்பாட்டிலும் சாலச் சிறந்தவரென்பதற்கு தக்க மொழிச் சான்றாம்.

ஆண்பால் பெண்பாற்பெயர் (Masculine and Feminine Nouns)

ஆண்பால்: உயர்திணை அஃறிணை
ஆண், ஆடவன், ஆடூஉ ஆண்பிள்ளை, ஆண்மகன்,மகன், மாந்தன்
.
.
.

ஆண்,அப்பர்,இரலை,உதள், ஏறு-ஏற்றை,ஒருத்தல், கடா, கடுவன், கண்டி, கலை, களிறு, காளை, சலகன், சே, சேவல், தகர்,புகல்வி, போத்து, மோத்தை,விடை.