பக்கம் எண் :

142தமிழ் வரலாறு

தாயின் தங்கை-சின்னம்மை, சிறிய தாய், தொத்தா, சித்தி (சிற்றாய்), பின்னி.

தந்தையின் தந்தை-அப்பச்சன், தாதா, தாதை, தாத்தா.

தந்தையின் தாய்-அப்பாச்சி, அப்பாத்தை, அப்பத்தி, அப்பாய்.

தாயின் தந்தை -அம்மாச்சன்.

தாயின் தாய்-அம்மாச்சி, அம்மாய், அமிஞை.

பெற்றோர் தந்தை (பொது) - பாட்டன், போற்றி - போத்தி.

பெற்றோர் தாய் (பொது)-பாட்டி.

பாட்டன் தந்தை - பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப் பாட்டன்.

பாட்டன் தாய்-பூட்டி, கொள்ளுப்பாட்டி.

பூட்டன் தந்தை-ஓட்டன், சீயான்(சேயான்).

பூட்டன் தாய்-ஓட்டி, சீயாள் (சேயாள்).

மகன் மகன், மகள் மகன் - பெயரன்-பேரன்.

மகன் மகள், மகள் மகள் - பெயர்த்தி-பேர்த்தி.

பேரன் மகன் - கொள்ளுப்பேரன், கொட்பேரன்.

பேரன் மகள் - கொள்ளுப்பேர்த்தி, கொட்பேர்த்தி.

சக்களத்தி(சகக்களத்தி) என்னும் இருபிறப்பிச் சொல்லை (Hybrid) ஒக்களத்தி என்றும், சம்பந்தி என்னும் வட சொல்லை உறவாடி என்றும், மொழிபெயர்த்துச் சொல்லல் வேண்டும்.

இயற்பெயர் (பெற்றோர் இட்டபெயர்)

எ-டு : அருண்மொழித்தேவன், திருவரங்கம், பரிமேலழகன்

சிறப்புப்பெயர்

எ-டு : காக்கைபாடினி, மகனை முறைசெய்தான்.

பட்டப்பெயர்

எ-டு : தொண்டர்சீர்பரவுவார், தலைக்கோல் (கணிகையர் பட்டம்), கலையிளைஞன் (B.A.), புலவன்.

விருதுப் பெயர்

எ-டு : மும்முடிச்சோழன், கங்கைகொண்டான்.

புலமைப் பெயர்

எ-டு : அறிஞன், பண்டிதன், புலவன், நாவலன், பாவலன்.