பகடிப் பெயர் (Nickname)
எ-டு: ஊன்பொதிபசுங்குடையன்,
நரிகுளிப்பாட்டி (வலக்காரம் மிக்கவன்.)
குலப்பெயர்
எ-டு: வேளாளன், பாணன்.
குலப்பட்டப்பெயர்
எ-டு: செட்டி,
நாடான், பிள்ளை, முதலி.
இது இக்காலவழக்கு
குடிப் பெயர்
எ-டு: குறுக்கையன்,
சேக்கிழான்.
இட(நில)வியற்பெயர்
எ-டு: திணைநிலை-குன்றவன்,
ஆயன்,வேட்டுவன்.
நாட்டுநிலை-சோழியன்,கொங்கன்,மாறோக்கத்தான்.
ஊர்நிலை-உறந்தையான், கூடலான்,
நகரமாந்தர்.
காலவியற் பெயர்
எ-டு: ஆதிரையான்,
வேனிலான்
தலைமைப் பெயர்
எ-டு: திணை நிலை-வெற்பன்,
குறும்பொறைநாடன், ஊரன்.
குலநிலை-அம்பலகாரன்,நாட்டாண்மைக்காரன்,
பட்டக்காரன்.
வாழ்நிலைப்பெயர்
எ-டு: இல்லறத்தான், இல்வாழ்வான்.
துறவி, அடிகள், முனிவன்
சினைமுதற்பெயர்
எ-டு: கரிகாலன்,பெருந்தலையன்
உடைமையியற்பெயர்
எ-டு: செல்வன், நாடுகிழவோன்
|