பக்கம் எண் :

144தமிழ் வரலாறு

பண்பியற்பெயர்

எ-டு: அன்பன், நல்லோர்

தொழிலியற் பெயர்

எ-டு: எழுத்தாளன், தச்சன், பொருநன், கடுநடையன்

மதவியற் பெயர்

எ-டு: சிவநெறியன், திருமால்நெறியன், சமணன்.

(2) இடப்பெயர் (Place-Names)

எ-டு:

குறிஞ்சி : சிறுகுடி, குறிச்சி, மலை, கோடு, குன்று-குன்றம், கா, சோலை, புழை, கடவு, கணவாய்.

முல்லை : பாடி, சேரி, பட்டி, வாடை, ஆநந்தல்.

மருதம் : முற்காலம்-ஊர், பேரூர், மூதூர், புத்தூர், நல்லூர், ஆற்றூர், குளத்தூர், சேற்றூர், ஆமூர், இல், குடி, இருப்பு, வாழ்வு, வயல், பண்ணை, நாடு, மங்கலம், குளம், இலஞ்சி,ஏரி, ஆறு-ஆறை, கிணறு, ஊருணி, நெல்லூர், நெல்வேலி, நென்மேனி, நெற்கோட்டை.

பிற்காலம்-நகர்-நகரம், எயில், கோட்டை, புரி, புரம், கோவில் - கோயில்.

நெய்தல் : முற்காலம்-குப்பம், கழி, காயல், கானல், கரை, துறை, கொண்கு, சேர்ப்பு,

பிற்காலம்-பட்டினம், பாக்கம், (அலைவாய், புகார், கூடல்).

பாலை : கடம்காடு, கானம், குடிக்காடு, முதுகுடி, பறந்தலை, நத்தம், வலசை.

முதற்காலத்தில், ஒவ்வொரு திணைநிலத்திலும் ஒவ்வொரு வகுப்பாரே வாழ்ந்திருந்தனர். மருதநிலத்தில், நாளடைவில் ஊர் விரிவும் தொழிற்பெருக்கமும் கல்வியறிவும் நாகரிக வளர்ச்சியும் வணிக முன்னேற்றமும் பேரரசாட்சியும் மதில் சூழ்ந்த மாநகரமைப் பும் ஏற்பட்டபின், நீர் வாணிகத்தின் பொருட்டு, பேரியாறுகள் கடலோடு கலக்கும் கயவாயில் பட்டினம் என்னும் துறைநகர்கள் கட்டப்பெற்றன.