பக்கம் எண் :

146தமிழ் வரலாறு

நாட்டுப்பிரிவுகள்:

பெரும்பிரிவு-மண்டலம்.

சிறுபெரும்பிரிவு-கோட்டம், வளநாடு.

சிறுபிரிவு-கூற்றம், நாடு.

கீழ்ச்சிறுபிரிவு-தனியூர், பற்று (பல சிற்றூர்த் தொகுதி)

சிற்றூர்-உட்கிடை.

(3) காலப் பெயர்

விடியலிலிருந்து ஒரு நாள் பப்பத்து நாழிகை கொண்ட ஆறு சிறுபொழுதாகவும், மேழ (சித்திரை) மாதத்திலிருந்து ஓர் ஆண்டு இவ்விரு மாதங்கொண்ட ஆறு பெரும் பொழுதாகவும், வகுக்கப் பட்டுள்ளன.

சிறுபொழுது

காலை, நண்பகல், எற்பாடு (சாயுங்காலம்), மாலை, யாமம், வைகறை.

நண்பகல் நடுவிற்கு உச்சிவேளை, உருமம் என்பன தூய உலக வழக்குத் தமிழ்ச்சொற்கள். உச்சிவேளைக்கு முந்திய பகல் முற்பகல்; பிந்திய பகல் பிற்பகல்.

பெரும்பொழுது

இளவேனில், முதுவேனில், கார் (மழை), கூதர் (குளிர்), முன்பனி, பின்பனி. வேனில் என்பது கோடை.

(4) சினைப்பெயர் (Names of organs)

நிலத்திணை: வேர், அடி, கிளை, இலை, பூ, காய், கனி முதலியன.

இயங்குதிணை: பாதம், கால், அரை, வயிறு, மார்பு, கழுத்து, தலை முதலியன.

(5) குணப்பெயர் (Abstract Noun)

வண்ணம், வடிவு, அளவு, சுவை, ஊறு, நாற்றம், இயல், செயல் எனக் குணம் எண்வகைப்படும்.

வண்ணம்

வெள்ளை, கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு, கத்தரி (violet) என வண்ணம் எழுவகை.

நீர்-நீல்-நீலம் = கடல்நீரின் நிறம். நீர் = கடல். தலைசிறந்த நீர்

நிலையும் பிற நீர்நிலைகட்கு மூலமாயிருப்பது கடலே