காலத்தில் முக்கால வினையும் நிகழ்கால வினைத்
தனி வடிவும் இல்லை போலும் என மயங்கற்க.
"காலந் தாமே மூன்றென மொழிப." (89)
"இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமுங் குறிப்பொடுங்
கொள்ளும்" (685)
என்று அவரே கூறியிருத்தலானும்,
"கிளந்த வல்ல செய்யுளுள்
திரிநவும்" (483)
"புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்
குதநவும்
வினைசெயல் மருங்கின் காலமொடு
வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா
குநவும்
.......................................................
தத்தம் குறிப்பிற் பொருள்செய்
குநவும்" (735)
"அன்புறு தகுந இறைச்சியுட்
சுட்டலும்" (1177)
என்று செய்கின்றன என்னும்
பலவின்பாற் படர்க்கை. நிகழ்கால வினைமுற்றின்
மரூஉ வடிவாகிய செய்குந என்னும் வாய்பாட்டுச்
சொற்களை அவரே ஆளுதலானும், அவர் காலத்தும் அவை
உண்டெனத் தெளிக.
3ஆம் நிலைப்பட்ட செய்கின்று என்னும்
நிகழ்கால வினைமுற்று, முறையே செய்குன்னு, செய்யுன்னு
எனத் திரியும். அங்ஙனமே, 4 ஆம் நிலைப்பட்ட
செய்கின்றான் என்னும் நிகழ்கால வினைமுற்றும்,
முறையே செய்குன்னான், செய்யுன் னான், செய்யுனன்
எனத் திரியும். ஆயின், இறுதிவடிவில்
ஈற்றயலெழுத்துத் தந்நகரமாக எழுதப்பெறும். அதனால்
செய்யுநன் என்றாகும். அது நிகழ்கால
வினையாலணையும் பெயர்.
"பாலறி மரபிற் பொருநர்
கண்ணும்" (102)
என்னும் தொல்காப்பிய அடியிலுள்ள
பொருநர் என்பது இங்ஙனம் அமைந்த வினையாலணையும்
பெயரே. மகிழ்நன், வாழ்நன் (வாணன்) என்பனவும்
இத்தகையவே.
"வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு" (குறள். 1193)
என்னுங் குறளில், வீழுநர் என்பது
நிகழ்கால வினையா லணையும் பெயர்; வாழுநம் என்பது
தன்மைப் பன்மை நிகழ்கால வினைமுற்று.
வாழ்கின்றாம் - வாழுன்னாம் - வாழுன்னம் - வாழுநம்.
|