பக்கம் எண் :

இயனிலைப் படலம்157

காண்க. இன்றும் அடி, குதி, கொல், சிரி, தாங்கு, நடி, பறி, மிதி, விழி முதலிய எண்ணிறந்த வினை முதனிலைகள் முக்காலத்திற்கும் பொதுவான தொழிற் பெயராக வழங்கி வருகின்றன. குறிப்புவினை போன்றே, முதனிலை யளவாயுள்ள முதற்கால வினையும் முன்பின் வரும் சொற்றுணைக்கொண்டு முக்காலமும் குறித்திருத்தல் வேண்டும்.

வினையின் நால்நிலைகள்

இ.கா. நி.கா. எ.கா.
முதல்நிலை :
2ஆம் நிலை : 3ஆம்நிலை :
4ஆம்நிலை :
செய்
செய்து
செய்து
1. செய்தான்
2. செய்தனன்
செய்
செய்யும்
செய்கின்ற செய்கின்றான் செய்கின்றனன்
செய்
செய்யும்
செய்யும்
செய்வான்
செய்வனன்

இரண்டாம் நிலையில், இறந்தகாலத்திற்குத் தனிவடிவம் ஏற்பட்டதேனும், நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஒரே வடிவேயிருந்தது. இப் பொதுவடிவம் நீண்டகாலம் வழக்கூன்றி யிருந்ததால், நாலாம் நிலை தோன்றிய பின்பும் செய்யுள் வழக்கில் அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருந்தது. இதை,

"நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய
செய்யும் செய்த வென்னுஞ் சொல்லே" (தொல். 719)

என்னும் தொல்காப்பியப் பெயரெச்ச வாய்பாட்டு நூற்பாவும்,

"பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின மூன்றும் நிகழுங் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா" (தொல். 712)

என்னும் செய்யும் என்னும் முற்று நூற்பாவும், கடைக்கழக நுலாகளும் செய்யுளும் உணர்த்தும்.

"காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்." (1227)

"பொருண்மாலை யாளரை யுள்ள மருண்மாலை
மாயுமென் மாயா வுயிர்" (1230)

என்னுங் குறள்களில், ‘மலரும‘, ‘மாயும்‘ என்பன மலர்கின்றது, மாய் கின்றது என்று பொருள்படுதல் காண்க. ஆயினும், தொல்காப்பியர்