ஈறாயினும், அன் + அது என்று பிரியும். ‘அன்ன‘
சுட்டடியும் ‘அது‘ ஒன்றன்பாலீறும் ஆகும். அன் + து -
அன்று. இம் முறையிலேயே, அணிந்தன்று (1), இழிந்தன்று
(77), இறந்தன்று (217), கண்டன்று (61), களைந்தன்று (77),
சிறந்தன்று (75), செயிர்த்தன்று (226), செற்றன்று (226),
தீர்ந்தன்று (42), மகிழ்ந்தன்று (192), மலிந்தன்று
(77), வியந்தன்று (77) என்னும் புறநானூற்றுச்
சொற்களெல்லாம் தோன்றியுள்ளன. இவ் வீறுபெற்ற
நிகழ்கால எதிர்கால ஒன்றன்பால் வினைமுற்றுகள்
வழக்கிறந்தன.
1. இறந்தகால வினை
இறந்தகால வினைமுற்று இற்றை
வினையெச்ச வடிவில் நின்றே பாலீறு பெற்றதினால்,
அதைப் பகுக்கும்போதும் வினையெச்ச வடிவும்
பாலீறுமாகவே பகுத்தல் வேண்டும்.
எ-டு : செய்தான் = செய்து + ஆன்
கண்டான் = கண்டு + ஆன்
சென்றான் = சென்று + ஆன்
தூங்கினான், ஓடினான் என்பவை, முறையே,
தூங்கியான் (தூங்கி + ஆன்), ஓடியான் (ஓடி + ஆன்)
என்பவற்றின் திரிபாகும். யகரம் நகர (னகர) மாகத்
திரிதல் இயல்பே.
ஒ.நோ : யான்-நான், ஓடிய-ஓடின
தூங்கினன், ஓடினன் என்பன, தூங்கினான்,
ஓடினான் என்பவற்றின் குறுக்கலாகும்.
செய்தன்று என்னும் வாய்பாட்டுச்
சொல்லான ஆகின்று என்னும் புறப்பாட்டுச் சொல்
(148) இகரம் தொக்கது.
ஆனான், போனான் என்பவை ஆயான் (ஆய் +
ஆன்), போயான் (போய் + ஆன்) என்பவற்றின்
திரிபாகும். செய்தான் என்னும் வினைமுற்று
வாய்பாட்டை ஆயான் என்பது ஒத்திருப்பது போன்றே,
செய்த என்னும் பெயரெச்ச வாய்பாட்டையும் ஆய (ஆய்
+ அ) என்பது ஒத்திருத்தல் காண்க.
இனி ஆயினான், போயினான் என்பவையும்
ஆயியான், போயியான் என்பவற்றின் திரிபே.
ஆய், போய் என்னும் இறந்தகால
வினையெச்சங்கள் முதலில் ஆயி, போயி என
இகரவீற்றனவா யிருந்து, பின்பு யகரமெய்
யீற்றனவாக மருவியதாகத் தெரிகின்றது.
ஒ.நோ : நா + இ = நாஇ - நாயி - நாய் =
நீண்டு தொங்கும் நாவையுடையது. "இகர யகரம் இறுதி
விரவும்" என்னும் தொல்
|