பக்கம் எண் :

இயனிலைப் படலம்161

காப்பிய நூற்பாவிற்கு, இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ‘நாய், நாஇ‘ என எடுத்துக்காட்டியிருத்தல் காண்க. இவ்வகையிலேயே, பா + இ = பாஇ -பாயி - பாய் (பரந்தது) என வரும். இவை பெயராயினும், இ - ய் எனத் திரிந்த முறை ஒன்றே.

ஆயின், ஆ, போ என்னும் வினைமுதனிலைகள் இகரத்தோடு வரின் வகர வுடம்படுமெய்யன்றோ வருமெனின், ஆயிடை, மாயிரு, பாயிருள், கோயில் என வருபவற்றை நோக்கித் தெளிக. வகர வுடம்படுமெய் வடிவினும் யகர வுடம்படுமெய் வடிவே பலுக்கற் கெளிதாயிருத்தல் காண்க.

போயியது என்பது, போயினது - போயின்று - போயிற்று எனத் திரியும். அது என்னும் ஈறு ‘து’ எனக் குறுகும்போது, புணர்ச்சியால் று, டு எனத் திரியும்.

எ-டு : நல் + து = நன்று, பால் + து = பாற்று
உள் + து = உண்டு, தாள் + து = தாட்டு
மன் + து = மன்று, அன் + து = அற்று
விண் + து = விண்டு, கண் + து = கட்டு
மன்னுதல் = கூடுதல், பொருந்துதல்.

சொல்லியான், சொல்லியது என்பன, சொல்லினான், சொல்லினது என்று திரிந்து, பின்பு சொன்னான், சொன்னது என மருவும். சொல்லினது என்பது, சொல்லின்று-சொல்லிற்று எனத் திரியும்.

போய-போன, எண்ணிய-எண்ணின, போயது-போனது, ஏவியோன்-ஏவினோன் எனப் பல வினைச்சொற்கள் இருவடிவுங் காட்டி நிற்பினும், போயியான், தூங்கியான் முதலிய வழக்கற்ற ஆனீற்று வினைமுற்று வடிவங்கள் இயற்கைக்கு மாறாகத் தோன்றலாம். இதற்கு அவற்றின் வழக்கற்ற தன்மையே கரணியம். முங்கினால் என்பதுபோல் தமிழில் னகரவடிவில் வரும் வினையெச் சங்களெல்லாம், சேரநாட்டு அல்லது மலையாளப் பழமொழிகளில் யகர வடிவிலேயே இன்றும் வழங்குதல் காண்க.

எ-டு:

ஆணாயால் ஒரு பெண்ணு வேண்டே!
ஆழம் முங்ஙியால் குளிரில்ல.
எல்லாரும் தண்டில் கயறியால் எடுப்பான் ஆள்வேண்டே!
ஏறக் கிழக்கோட்டுப் போயால் படிஞ்ஞாட்டு.
கக்குவான் துடங்ஙியால் நில்க்குவான் பரிக்கோணம்.
கொஞ்சன் துள்ளியால் முட்டோளம், ஏற துள்ளியால் சட்டியில்.
சக்கர கூட்டியால் கம்பிளியும் தின்னாம்.