(3) எதிர்கால வினை
செய்யும் என்னும் எதிர்கால
வினைமுற்றின் ஈறான உம் என்பது முன்மைச் சுட்டான
உகர வடியிற் பிறந்து, கால முன்னான முற்காலத்தையும்
இடமுன்னான எதிர்காலத்தையும் உணர்த்தும்
சொல்லுறுப்பாகும்.
"உம்மை வினைவந் துருத்த
லொழியாது" (மணிமே.
26: 32)
என்பதில் முற்பிறப்பையும்.
"உம்மை-எரிவாய் நிரயத்து
வீழ்வர்கொல்" (நாலடி.
58)
என்பதில் மறுமையையும், உம்மைச்சொல்
உணர்த்துதல் காண்க.
செய்யும் என்பது பின்பு பாலீறு பெற்று,
செய்யுமான்-செய்யு வான்-செய்வான் எனத்
திரிந்தது. இம் முறையில் அமைந்த மூவிட ஐம்பால்
வினைமுற்றுகளாவன:
தன்மை ஒருமை:
(செய்யுமேன்)-செய்யுவேன்-செய்வேன்-செய்வென்
-செய்வன்- செய்வல்.
பன்மை:(செய்யுமேம்)-செய்யுவேம்-செய்வேம்-செய்வெம்.
(செய்யுமாம்)-செய்யுவாம்-செய்வாம்-செய்வம்.
(செய்யுமோம்)-செய்யுவோம்-செய்வோம்.
முன்னிலை ஒருமை:
செய்யுமீ-செய்யுமே
(செய்மே)-செய்மை-செய்வை-செய்வாய்
பன்மை:
(செய்யுமீர்)-செய்மீர்-செய்வீர்
படர்க்கை-ஆ-பா:
(செய்யுமான்)-செய்மான்-செய்வான்
-செய்வன்-செய்மான்- செய்மன்
பெ.பா:
(செய்யுமாள்)-செய்மாள்-செய்வாள்-செய்வள்-செய்மாள்-
செய்மள்
ப.பா:
(செய்யுமார்)-செய்மார்-செய்வார்-செய்வர்-செய்மார்-
செய்மர்
ஒ.பா:
(செய்யுமது)-செய்மது-செய்வது
பல.பா:
(செய்யும)-செய்ம-செய்வ
|