பக்கம் எண் :

174தமிழ் வரலாறு

2. அகரவீற்று வினையெச்சத்துடன் படும் என்னும் துணை வினை சேர்தல்.

எ-டு:

"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்." (குறள். 335)

(4) கடமைவினை

எ-டு:

பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கவும், பிள்ளை கள் பெரியோரானபின் பெற்றோரைப் பேணவுங் கடவர்.

(5) கற்பனைவினை

இறைவன் மக்களுக்கு இட்ட கட்டளையை அல்லது கட்டளையாகக் கூறுவது கற்பனை வினை. இது முன்னிலை எதிர்கால வினைமுற்றொடு ஆக என்னும் துணைவினை சேர்ந்துவரும்.

எ-டு:

உன்னைப்போற் பிறனை நேசிப்பாயாக.
களவு செய்யா திருப்பாயாக.

(6) சூளுறவுவினை

இது இருவகையில் வரும்.

1. தன்மை யெதிர்கால வினைமுற்றொடு (வியங்கோள் வடிவிலுள்ள) ஆக என்னும் துணைவினை சேர்தல்.

எ-டு:

நான் இவளைக் கைவிடின், அன்னையைக் கொன்றான் அடையும் உலகை அடைவேனாக.

2. வியங்கோள் வினை.

எ-டு:

"அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக." (புறம். 71)

(7) செயவிடல் வினை

படர்க்கையானை ஒன்று செய்யவிடுமாறு முன்னிலையானை ஏவுவது செயவிடல் வினையாம். இதை இசைவிப்பு வினை என்றும்