|
அது என்னால் இயலாது, ஒண்ணாது, மாளாது,
முடியாது.
2. அகரவீற்று
வினையெச்சத்தோடு கில் அல்லது மாட்டு என்னும்
துணைவினையின் முற்றுச்சேர்தல்.
கில் என்பது முக்காலத்திலும் வரும்;
மாட்டு என்பது எதிர்காலத்தில் மட்டும் வரும்.
மாட்டு என்பது மாள் என்பதன் பிறவினை.
மாளுதல் முடிதல்; மாட்டுதல் முடியச்செய்தல்.
எ-டு:
செய்யகின்றேன்,
செய்யகிற்கின்றேன், செய்யகிற்பேன்.
செய்யமாட்டுவேன் = முடியச்செய்வேன், என்னாற்
செய்ய முடியும்.
3. அகரவீற்று
வினையெச்சத்தோடு படவில்லை என்னும் கூட்டு
வினைச்சொல் சேர்தல். இது உடன்பாட்டில் வராது.
எ-டு:
(என்னால்)
எழுந்திருக்கப்படவில்லை = எழுந்திருக்கமுடிய
வில்லை.
கூடு, படு என்னும் துணைவினைகள் எதிர்மறை
வடிவில் விலக்கு வினையாம்.
எ-டு:
நீ போகக்கூடாது, நீ
போகப்படாது.
மாட்டு, முடி என்னும் துணைவினைகள் தன்மை
எதிர்மறை வடிவில் மறுப்பு வினையாம்.
எ-டு: நான் வரமாட்டேன், நான்
வரமுடியாது.
(10) கேள்விப்பாட்டு வினை
பிறர் வாயிலாய்க்
கேள்விப்பட்டதைக் குறிக்கும் வினை
கேள்விப்பாட்டு வினையாம். இது வினைமுற்றோடும்
பெய ரோடும் ஆம் என்னும் துணைவினை சேர்ந்துவரும்.
எ-டு:
நேற்றுவந்தானாம், நாளைக்கு
விடுமுறையாம்.
(11) உய்த்துணர்வினை
இது மூவகையில் வரும்.
|