|
1. வினைமுற்றுடன் போலும்
அல்லது போலிருக்கிறது என்னும் சொற்சேர்தல்.
எ-டு:
அவன்
தேறிவிட்டான்போலும்! இன்று மழைவரும்
போலிருக்கிறது.
2. வினைமுற்றுடன் ஆம்
காட்டியும் என்னும் ஈரிடைச் சொற் சேர்தல்.
எ-டு: நேற்றுவந்தானாங்
காட்டியும்.
3. வினைமுற்றுடன் ஆக்கும் என்னும்
சொற்சேர்தல். ஆகும்-ஆக்கும்.
எ-டு: அவன்
வீட்டிலில்லையாக்கும்.
(12) உயர்வு குறித்தல் வினை
பெயரொடு ஆக்கும் என்னும் துணைவினை
சேர்ந்து ஒருவரின் உயர்வு குறிப்பது உயர்வுகுறிப்பு
வினையாம்.
எ-டு:
அவர் யார் தெரியுமா?
அமெரிக்கச் செல்வருள் தலைமையான வராக்கும்!
(13) தேற்றவினை
ஒரு வினைநிகழ்ச்சியை
உறுதிப்படுத்துவது தேற்ற வினையாம். தேறுதல்
தெளிதல். தேற்றுதல் தெளிவித்தல். தேற்று வது
தேற்றம். இது அறுவகையில் அமையும்.
1. ஏகாரவிடைச் சொல்லொடு புணர்ந்த
அகரவீற்று வினையெச்சத்தின்பின் முற்றுவினை.
எ-டு: வரவே வருவான்.
2. தான் என்னும் இடைச்சொல்லொடு
புணர்ந்த அகரவீற்றுவினையெச்சத்தின்பின்
முற்றுவினை.
எ-டு: வரத்தான்
செய்வான்.
3. ஏகார விடைச்சொல்லொடு புணர்ந்த
இறந்தகால வினையெச்சத்தின்பின் வினைமுற்று.
எ-டு: வந்தே தீர்வான்.
4. ஏகார விடைச்சொல்லொடு புணர்ந்த
வினைமுற்று.
எ-டு: வந்தானே!
|