தொடங்குவது மிகமிகக்
கண்டிக்கத்தக்க தொன்றாம். இந்தியாவின்
வடபாகத்தில் ஆரியத்தினின்று தமிழை அல்லது
திரவிடத்தைப் பிரிக்க இயலாவிடினும் தென்
பாகத்தில் இயல்வதாகும். இங்கும் இயலாதென்பது
தமிழ்ப் பகைவர் அல்லது முறைகோடிய
ஆராய்ச்சியாளர் கூற்றே. தொடங்குவது மிகமிகக்
கண்டிக்கத்தக்க தொன்றாம். இந்தியாவின்
வடபாகத்தில் ஆரியத்தினின்று தமிழை அல்லது
திரவிடத்தைப் பிரிக்க இயலாவிடினும் தென்
பாகத்தில் இயல்வதாகும். இங்கும் இயலாதென்பது
தமிழ்ப் பகைவர் அல்லது முறைகோடிய
ஆராய்ச்சியாளர் கூற்றே.
6. தலைகீழாராய்ச்சி
தமிழர் குமரிக்கண்டத்தில்
தோன்றிக், கடல்கோள், இனப் பெருக்கம்,
நாடுகாண் விருப்பம் முதலிய பல்வேறு கரணியங்
களால், வடக்கே சென்றனர். அவருட் பலர் பனிமலை
(இமயம்) வரை சென்று திரவிடராயினர்.
வடநாட்டுத் திரவிடருள் ஒருசாரர்,
வடமேற்கே எத்தியோப் பியா, எகிபது, செப்பறைத்(Cyprus)
தீவு, கிரேத்தாத்(Crete)
தீவு, கிரேக்கம், இத்தாலி முதலிய நாடுகள்
வழியாய்க் காண்டினேவியம் வரை சென்று ஆரியராக
மாறினர். அவருள் ஒரு வகுப்பாரே, வேத ஆசிரியராகச்
சின்ன ஆசியா, பாரசீகம் முதலிய நாடுகள் வழியாய்
இந்தியாவிற்குள் (கி.மு. 2000-1500) புகுந்தனர்.
அந்நிலையில், பழைய வடதிரவிடம், பைசாசம்,
சூரசேனம், மாகதம் என்னும் மூவேறு
பிராகிருதங்களாகத் திரித்திருந்தது.
விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள மொழிகளெல்லாம்
செந்தமிழும் கொடுந் தமிழுமாயிருந்ததினால்,
அவையாவும் திரவிடம் என்னும் ஒரு பிராகிருத
மொழியாய்க் கொள்ளப்பட்டன.
வேத ஆரியம் வழக்கற்றுப் போனபின்,
அதனொடு நாற்பிரா கிருதங்களையுஞ் சேர்த்தமைத்த
அரைச்செயற்கையான இலக்கிய நடைமொழியே (Literary
dialect) சமற்கிருதம்.
தமிழ் குமரிக்கண்டத்தில்
தோன்றியதென்று, முக்கழக வரலாற்றினின்றும்
புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய பனுவல்
களினின்றும் தெளிவாய் அறியக்கிடந்தும், ஆரியச்
சார்பான தமிழ்ப்பகைவரும், தமிழையறியாத அல்லது
ஆங்கில வாயிலாய் அரைகுறையாய்க் கற்ற வடவரும்
மேலையரும், மொழியாராய்ச்சி யில்லாத்
தமிழன்பரும், ஆகிய முத் திறத்தினர், தமிழர்
நண்ணிலக் கடற்கரையினின்று வந்தவரென்றும், சீன
நாட்டினின்று வந்தவ ரென்றும், மறைத்தும்
மயங்கியும் கூறிவருகின்றனர்.
தமிழ் திரவிடமாகவும் திரவிடம்
பிராகிருதமாகவும், ஆரியமும் பிராகிருதமும் தமிழும்
கலந்து சமற்கிருதமாகவும், திரிந்திருக்க,
சமற்கிருதத்தினின்று பிராகிருதமும் பிராகிருதத்
தினின்று திரவிடம் அல்லது தமிழும் திரிந்ததாகத்
தலைகீழாய்
|