வேறெதையும் போல வேறுபாட்டிற் கிடமானவையே
யாயினும், அவற்றின் தொடர்புகளையும்
கிளைப்புகளையும் காலத்தாலும் இடத்தாலும்
எத்துணைச் சேய்மைப்பட்டிருப்பினும், ஏறத்தாழ
மாந்தர் மொழிகள் எல்லாவற்றிலும் துருவிக்
காணலாம். முதற்கண் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்திருந்து, பின்பு காலக்கடப்பினாலும்
வேறுபாட்டு வளர்ச்சியினாலும் பிறப்புத்
தொடர்பற்றுப்ப் போன, சில மொழிகளின்
தொடர்புகுறியாக அல்லது உறவுக்கூறாக அறியக்கூடிய
ஒரே சான்று மூவிடப்பகரப் பெயர்களே. இக்கருத்துக் குறிப்பு, எல்லாச்சொல்
வகைகளுள்ளும் மிக நிலைப்புத் திறனுள்ளனவாகத்
தோன்றும் தன்மைப் பகரப்பெயர்களையே,
சிறப்பாகத் தழுவும்."
(சென்னைப் பதிப்பு, நூல், ப. 359)
(இது திரவிட ஒப்பியல் இலக்கணத்தில்
பகரப் பெயர்கள் (Pro-
nouns) என்னும் பகுதியின் முகவுரையாக
வுள்ளது. தமிழ் மூவிடப் பெயர்கள், திரிந்தும்
திரியாமலும் ஏறத்தாழ உலக மொழிகள்
எல்லாவற்றிலும் பரந்து கிடக்கின்றன என்பதை, இது
குறிப்பாக வுணர்த்துகின்றது.)
(4) "திரவிட மொழிக்குடும்பம்
சமற்கிருதத்திற்கு முற்பட்ட சில முதுபழங்கூறுகளைப்
போற்றி வைத்திருக்கின்ற தென்றும், சிறப்பாக
அதன் சுட்டுப்பெயர்கள், சமற்கிருதத்தினின்று
கடன் கொள்ளப்படாமல் சமற்கிருதச் சுட்டுச்
சொற்கட்கும் இந்தோ-ஐரோப்பியக்
குடும்பத்தைச் சேர்ந்து வேறுபட்ட பிறமொழிச்
சுட்டுச் சொற்கட்கும் மூலமான, அந்தப் பழைய
யாப்பெத்தியச் சுட்டடி களை நிகர்த்து
நிற்கின்றன வென்றும், யான் முன்னமே ஒரு கருதுகோளை
வெளியிட்டிருக்கின்றேன்."
(சென்னைப் பதிப்பு, முகவுரை ப. 422)
(5) பின் வருஞ் சொல்வரிசைகள், நாம்
இலக்கண வொப்பீட் டினால் வந்த முடிபிற்கே,
தனிப்பட்ட முறையில் தமக்குரிய அளவில் சான்று
பகர்கின்றன. அம் முடிபாவது, திரவிட மொழிகள்,
சமற்கிருதத்திற்கு முற்பட்டதும்
இந்தே-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்குத்
தாயாகக் கருதப்படுவதுமான அந்த இறந்துபட்ட
மொழியோடு கொண்டுள்ள தொன்மையான மிக
நெருங்கிய தொடர்புகுறிகளை காட்டுகின்றன
என்பதே."
(சென்னைப் பதிப்பு, முகவுரை ப. 565)
|