சொற்கள், எளிய வொலிப்பட்ட இயற்கையான
தோற்றமும் பல்வேறு நிலைப்பட்ட வளர்ச்சியும்
வேர்ப்பொருட் கரணியமுங் காட்டி, ஒரே
தொடர்புகொண்டு வரலாற்றிற் கெட்டாத் தொன்று
தொட்டு இத் தென்னாட்டிலேயே வழங்கி வரவும்,
அவற்றைச் சிறிதும் ஆராயாதும் நோக்காதும்,
வேற்று நாட்டிலிருந்து வந்தன வென்று கொள்வது,
எத்துணைப் பொருந்தாக் கொள்கையாம்!
7. கால்டுவெல் கண்காணியாரின்
காட்சியுரைகள்
கால்டுவெல் கண்காணியார் தமிழரை
அல்லது திரவிடரை வடக்கினின்று வந்தவராகக்
கருதியிருந்தும், தம் நுண்மாண் நுழைபுலத்தினால்
தென்மொழியின் தொன்முது முன்மையைக் கண்டு,
பின்வருமாறு தம் திரவிட மொழிகளின் ஒப்பியல்
இலக் கணத்திற் கூறியுள்ளார்:
"திரவிடமொழிக் குடும்பத்தை,
இந்தோ - ஐரோப்பிய மொழித் தொகுதிக்கும்
சித்திய மொழித் தொகுதிக்கும் இடைப்பட்ட
இணைப்பு அண்டாக மட்டுமன்றி சில வகைளில்,
சிறப்பாகப் பகரப்(பதிற்) பெயர் பற்றிய
வகையில், மாந்தன் மொழி வரலாற்றில்
இந்தோ-ஐரோப்பிய நிலைக்கு முற்பட்டதும்,
சித்திய நிலைக்கு முற்பட்டதும், அவ் விரு
குடும்பங்களும் ஒன்றினொன்று பிரிந்து போனதற்கு
முற்பட்டதுமான, ஒரு காலத்தின் நிலைமையைக்
காட்டும் சான்றுகளுள் இறவாது எஞ்சி நிற்பவற்றுள்
தலைசிறந்ததாகக் கருத இடமில்லையா?"
(சென்னைப் பதிப்பு, முகவுரை, ப. 10)
(2) "சில திரவிடச்
சொல்வடிவங்களும் வேர்களும், மக்க ளினத்தின்
முதற்பெற்றோர் மொழியினின்று வழிவழிவந்து
இந்து-திரவிடருக்கு மொழியியலுரிமையாகச்
சேர்ந்துள்ளவற்றுள் ஒரு பகுதியாய் இருக்கக்
கூடாதாவென்பது, மற்றொரு வினா?"
(சென்னைப் பதிப்பு, முகவுரை, ப. 11)
(3) "பகரப்பெயர்கள், மொழிகளின்
உறவையும் மொழிக் குடும்பங்களின் உறவையும் மிக
விளக்கிக் காட்டுகின்றன. ஏனெனின், மூவிடப்
பகரப்பெயர்கள், சிறப்பாகத் தன்மை முன்னிலை
யொருமைப் பெயர்கள், வேறெச் சொல் வகையினும்
மிகுந்த நிலைப்புத் திறனைக் காட்டுவனவாகவும்,
பல்லூழிக் கடப்பிலும் மிகச்சிறிதே திரிவதாகக்
காணப் படுவனவாகவும் உள்ளன. அவை எண்ணுப்
பெயர்களையும் வேற்றுமை யுருபுகளையும் வினையீறு
களையும்விட மிக நிலைப்புத்திறன் பெற்றுள்ளன.
அவை,
|