(1) திராவிடம் என்னும் சொல்
முதலாவது தமிழ் என்னும் பொருளிலேயே வழங்கியமை
வடநூலார் தமிழை ஒரு பிராகிருதமாகக்
கொண்ட போது, அதைத் ‘த்ராவிடீ‘ என அழைத்தனர்.
பாகவத புராணத்தில், சத்தியவிரதன்
என்னும் பெயராற் குறிக்கப்படும் ஒரு தமிழரசன்,
திரவிடபதி எனப்படுகின்றான்.
கி.பி. 470ஆம் ஆண்டில் வச்சிரநந்தி
என்னும் சமணர் மதுரையில் நிறுவிய தமிழ்க் கழகம்’
திரவிட சங்கம் எனப்பட்டது.
பிள்ளை லோகாசார்ய சீயர் (500
ஆண்டுகட்கு முன்) பெரிய திருமொழிச் சிறப்புப்
பாயிரவுரையில், தமிழிலக்கணத்தைத் திரவிட
சாஸ்திரம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
நாலாயிரத் தெய்வப் பனுவல்
திரவிடவேதம் என்றும், சிவஞான முனிவரின்
மெய்கண்டான் நூல் அகலவுரை திரவிட மாபாடியம்
என்றும், சபாபதி நாவலரின் தமிழிலக்கிய வரலாறு
திராவிடப் பிரகாசிகை என்றும் பெயர்
பெற்றுள்ளன.
தாயுமானவர் (18ஆம் நூற்.) "கல்லாத
பேர்களே நல்லவர்கள்" என்னும் பாட்டில்,
தமிழைத் திராவிடம் எனக் குறிப்பிடுகின்றார்.
கிறித்துவிற்கு முன் தமிழிலன்றித்
திரவிடமொழி யெதிலும் இலக்கியமின்மையால்,
திரவிடம் என்னும் பெயரால் தமிழையே தலைமையாகக்
குறித்து வந்தனர், வடவர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில்
தான், குமரிலபட்டர் ஆந்திர-திராவிட பாஷா
என்னுந் தொடரால் தெலுங்கைத் தமிழினின்று
பிரித்துக் கூறினர்.
திரவிடம் என்னும் திரிந்த வடிவைச்
செம்மையான வடிவாகக் கொண்டு, ஆரியத்தால்
தெற்கே துரத்தப்பட்டது என்று தமிழ்ப் பகைவரும்,
தீவினையைத் துரத்துவது என்று சிவஞான முனிவரும்,
திருவிடம் (திரு+இடம்) என்று பேரா. பூரணலிங்கம்
பிள்ளையும் துரூவிதரோடு தொடர்பு படுத்தி
ஞானப்பிரகாசக் குரவரும், வெவ்வேறு பொருட்
கரணியங் காட்டுவாராயினர்.
(2) தமிழ் என்னும் சொல்லையொத்த
பெயர்களே வெளிநாடுகளில் வழங்கியமை
கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் எழுந்த
பெரிப்புளுசு(Periplus)
என்னும் கிரேக்க நூல் தமிராய்(Tamirai)
என்று குறித்துள்ளது. பியூத்திங்கர் அட்டவணை(Peutinger
Tabels) என்னும் உரோம
ஞாலப்படங்களில்(Atlas)
தமிழகம் தமிரிக்கே ‘(Damirice)‘ எனக்
குறிக்கப்பட்டுள்ளது. தாலமி(Ptolemy)
என்னும் எகிபதிய ஞால
|