நூலார் (கி.பி. 139-61),
பியூத்திங்கர் அட்டவணை யிடப்பெயர்களைப்
பெயர்த்தெழுதும்போது, கிரேக்க டகரத்தை
லகரமாகக் கொண்டு, திமிரிக்கே(Dymirice)
என்னும் பெயரைத் தவறுதலாக லுமிரிக்கி (Lumiriki)
என்று எழுதிவிட்டார். ஆயினும் அவருக்குப் பின்னர்
வந்த ரேவண்ணா(Ravenna) ஞாலநூலார் தமிரிக்கா(Damirica)
எனத் திருத்திக்கொண்டார்.
தமிழ் என்னுஞ்சொல், கி.பி. 7ஆம்
நூற்றாண்டில் இந்தியா விற்கு வந்த இவென்திசாங்(Hwen
Thsang) என்னும் சீன வழிப் போக்கர்
குறிப்பில், சிமொலொ(Tehi-mo-lo)
என்னும் வடிவில் உள்ளது.
இதைத் ‘திமல‘(Dimala)
அல்லது ‘திமர‘(Dimara)
என்றும் படிக்கலாம் என்பர் கால்டுவெலார்.
பாலிமொழியிலுள்ள மகா வமிசம்(Mahavanso)
என்னும் இலங்கை வரலாற்றில், ‘தமிலோ‘ (Damilo)
என்னும் வடிவமே உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத்
‘தமுல்‘(Tamul)
என்றனர். அவருள் தேனிய விடையூழியர் (Danish
Mis- sionaries)
மட்டும் ‘தமுலிக்க மொழி‘(Lingua
Damulica)
என இலத்தீன் வடிவில்
குறித்தனர், ஆங்கிலத்தில் ‘தமில்‘(Tamil)
என்னும் வடிவம் வழங்குகின்றது. மாக்கசு முல்லர்
தென்மொழிக் குடும்பத்திற்குத் ‘தமுலிக்கு‘(Tamulic)
எனப் பெயரிட்டார்.
(3) திராவிடம் என்னும் சொல், தமிழ் என்னுஞ்
சொல்லிற்கு நெருங்கிய ‘திரமிலங்‘ (அல்லது
திரமிளம்) என்னும் வடிவில் வழங்கியமை
கி.பி. 6ஆம் நூற்றாண்டில்
வராகமிகிரர் நூலின் பழங் கையெழுத்துப் படிகளில்
த்ரமிட என்னும் வடிவும் மங்கலேச அரசனின்
பட்டங்களில் த்ரமில என்னும் வடிவும் காணப்
பட்டன வென்றும், தாரநாதர் திபேத்தில் எழுதிய
‘இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்பின வரலாறு‘
(கி.பி. 1573) என்னும் நூலில், திராவிடர்
‘திரமிலர்‘(Dramilas)
எனக் குறிப்பிட்டுள்ளனர் என்றும், புராணங்களின்
பழைய மொழிபெயர்ப்புகளிலெல்லாம் இவ் வடிவே
பெருவழக்கா யிருப்பதாகச் குண்டெர்ட்டுப்
பண்டாரகர் கூறுகிறா ரென்றும், திரவிடம் என்பதன்
மிகப் பழைய வடிவம் ‘த்ரமிட‘(Dramida)
என்பது என்றும்; கால்டுவெல் கண்காணியார்
வரைந்துள்ளார்6.
நாட்டுப் பெயர்களும்
மொழிப்பெயர்களும் பண்டைக் காலத்திற்
பெரும்பாலும் ‘அம்‘ ஈறுபெற்றுத் தமிழில்
வழங்கியதை
6. தி. ஒ. இ., ப.9
|