நோக்கும் போது, தமிழ் என்னும்
சொல்லும் சிறுபான்மை தமிழம் என்று
வழங்கியதாகக் கருத இடம் ஏற்படுகின்றது. தமிழம்,
த்ரமில(ம்) த்ரமிள( ம்), த்ரமிட(ம்), த்ரவிட(ம்)
என்னும் வடிவுகளை முறையே நோக்கின், தமிழ்
என்பதன் திரிபே திரவிடம் என்பது புலனாம்.
ஆயினும் கால்டுவெலார் இவ் வெளிய முறையில்
உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத்
தலைகீழாய் நோக்கி, திரவிடம் என்னுஞ் சொல்லே
தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்.
ஆயின், கிரையர்சன் இத் தவற்றைத்
திருத்திவிட்டனர்.
"த்ரமிளம் என்பது தமிழ் எனத்
திரிதலும் அது" என்று பிரயோக விவேக நூலார் (ப.4)
கூறியது, அவரது தமிழ் வெறுப்பைக் காட்டும்
சான்றேயென அறிக.
(4) திராவிடம் என்னும் வடிவம் தமிழ்நாட்டுலக
வழக்கில் அருகியும் வழங்காமை
(5) த்ரமிடம், த்ரவிடம் என்னும் ரகரமேற்றிய
வடிவுகளே யன்றி, ‘தபிள‘, ‘தவிட‘ என்னும் மிக
நெருங்கிய வடிவுகளும் வடமொழி நாடகங்களிலும் சமண
நூல்களிலும் வழங்கியிருத்தல்
இனி, தமிழ் என்னுஞ் சொல், கிரேக்க
நாட்டில் வழங்கிய ‘தெர்மிலே‘ அல்லது ‘தெர்மிலர்‘
அல்லது ‘திரமிலர்‘ என்னும் இனப் பெயரினின்று
திரிந்ததென்று ஞானப்பிரகாசக் குரவரும்,
வங்கநாட்டுத் ‘தம்ரலித்தி‘ என்னும் நகர்ப்
பெயரினின்று தோன்றிய தென்று கனகசபைப்
பிள்ளையும்; தாமம்(ஞாயிறு), எல்லாம் (இலங்கை)
என்னும் இரு சொல், முறையே தாம் ஈழம் என மருவிப்
புணர்ந்த வடிவென்று கந்தையாப் பிள்ளையும்; தமி
என்னும் முதனிலையடியாய்ப் பிறந்து ஒப்பற்றதெனப்
பொருள் படுவதென்று தாமோதரம் பிள்ளையும்,
தனிமையாக ழகரத்தைக் கொண்ட மொழி என்னும்
பொருள் தருவதென்று ஒரு சாராரும், வலி
மெலியிடையாகிய மூவின மெய்களைக் கொண்ட
நிலைமையைக் குறிப்பதென்று மற்றொரு சாராரும்,
அதற்குப் பொருட்கரணியங் காட்டுவர். இனிமையானது
என்று பொருட்கரணியங் காட்டுவாருள், (S)
சீநிவாசையங்கார் ஒருவரே தம்+இழ் என்று பகுத்து
இழ் என்னும் ஈறு இனிமைப் பொருள்படும் இழும்
என்னும் சொல்லின் சிதைவெனக் காட்டுவர்.
பிறரெல்லாம், "இனிமையு நீர்மையுந் தமிழென
லாகும்" என்னும் பிங்கலந்தை நூற்பாவைத் தழுவி,
தமிழ் என்னும் சொற்கே இனிமைப் பொருளுண்டெனக்
கொள்வர்.
கிரேக்க நாட்டில், என்றேனும் தமிழ்
வழங்கிய தென்பதற்கோ தமிழர்
வாழ்ந்திருந்தார் என்பதற்கோ ஒரு சான்று
மின்மையானும்;
|