என்று இசைத் தமிழும், இன்பத்
துறைகளாக மாணிக்கவாசகராற்
குறிக்கப்பட்டிருத்தலையும் நோக்கித் தெளிக.
அண்மையில் தமிழ்ப்பேராசிரியர்
ஒருவர்7,
தமிழ் என்னுஞ் சொல்லைத் த+மிழ் என்று
பிரித்தும், தம்+மிழற்று என்று விரித்தும், நமது
இனியமொழி என்று பொருள் குறித்தும், ஆங்கிலத்
தில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்.
முறையே, ஏம் (யாம்), நாம், நூம், தாம்
என்னும் மூவிடப் பெயர்களின் வேற்றுமையடிகளான
எம், நம், நும், தம் என்னும் சொற்களுள், எம், நம்
என்னும் தன்மைச் சொற்களே அருமைப் பாட்டை
யுணர்த்தும். இது ‘ஆர்வக் கோளி‘ (Dative
of Interest) என்னும் ஆங்கில விலக்கண
அமைதியை ஒருபுடை யொத்தது.
எ-டு: எம்பிள்ளை,
எம்ஆள், எம்பெருமான்;
நம்பிள்ளை, நம்ஆள்,
நம்பெருமான்,
நம்பெருமாள்,
நம்மாழ்வார்.
தம் என்பது தமது என்று படர்க்கையை
யுணர்த்துமே யன்றி, நமது என்று உளப்பாட்டுத்
தன்மையை உணர்த்தாது. ஒருவர் தமக்கு
அருமையானவரைத் தம்மொடுபடுத்திக் கூறுவதன்றிப்
பிறரொடு படுத்திக் கூறுவது, இயல்பன்றென்பதும்
அறிக.
"மழவுங் குழவும் இளமைப் பொருள" (உரி. 14)
என்பது தொல்காப்பியம்.
இளமை மென்மையையும் உணர்த்தும்
மழ - மழல் - மழலை, மழல் - மழறு - மழற்று -
மிழற்று.
மிழற்றுதல் = குழந்தைபோல்
மென்மையாய் அல்லது
இனிமையாய்ப் பேசுதல்.
மிழற்று என்னும் சொல் மிழ் எனக்
குறுகி ஈறாயிற் றென்பது பொருந்தாது.
ஆயினும், நம் பேராசிரியரின்
நன்னோக்கம் மகிழ்ந்து பாராட்டற் பாலதே.
இனி, வேறு எவ்வகையில் தமிழ் என்னும்
பெயர் தோன்றி யிருக்கலாமெனின், கூறுவேன்.
மொழிகட்குப் பெயர் முதலாவது
நாடுபற்றியும், பின்பு மக்கள் பற்றியும்,
அதன்பின் மொழியின் தன்மைபற்றியும்
தோன்றியுள்ளன.
7. வே.வ. இராமசாமி
பாராட்டு’ மலர், பக்.93-5
|