சைகை எனச் சைகை இரு திறப்படுமாதலால்,
முகச்சைகையாகிய வலிச்சமும் (grimace)
சைகையுள் அடங்கும்.
மொழியற்ற நிலையில், மாந்தன்
கருத்தும் எண்ணமும் உருவலிப்பாகவே (imagination)
இருந்துவந்தன. உருவலிப்பாவது, ஓர் இடத்தையோ,
பொருளையோ, நிகழ்ச்சியையோ உள்ளத்திற் படம்
பிடித்தல்.
மொழித்துணையின்றிக் கருத்து
நிகழாதென்பது ஆராய்ச்சி யில்லாதார் கூற்றே.
உணர்ச்சி, வேட்கை, நினைப்பு, எண்ணம்,
தீர்மானம், அகக்காட்சி, இன்புறவு, பொந்திகை
(திருப்தி), மகிழ்ச்சி, துன்புறவு, சினம் அல்லது
வெறுப்பு ஆகிய பல்வேறு உளநிகழ்ச்சி களும்,
நமக்கிருப்பது போன்றே மொழியற்ற மாந்தனுக்கும்
இருந்தன. இவ்வுண்மையை இன்றும் ஊமையரிடத்துக்
காண்க. மொழியமைந்த பின்பும், மாந்தன்
கருத்திற் பெரும்பகுதி உருவ லிப்பே யென்பதை
ஓர்ந்துணர்க.
iv இயற்கை மொழி (தோரா. கி.மு. 1,00,000-50,000)
எழுத்துப் பலுக்கமும் (உச்சரிப்பும்)
சொற்பொருத்தும் இன்றிப் பெரும்பாலும்
இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி, இயற்கை
மொழியாம் (Natural Language).
இது முழைத்தல்மொழி (Inarticulate
Speech) எனப்படும், இதன் ஒலிகள்
எழுவகைய:
(1) உணர்ச்சி யொலிகள் (Emotional
Sounds)
இன்ப துன்ப உணர்ச்சியை வெளியிடும்
ஒலிகள் உணர்ச்சி யொலிகள்.
எ-டு: ஆ, ஈ, ஊ, ஓ, ஐ
(2) விளியொலிகள் (Vocative
Sounds)
பிறரை விளிக்கும் ஒலிகள்
விளியொலிகள். விளித்தல் -கூப்பிடுதல்.
எ-டு: ஏ, ஏய், ஓ, ஏலா, எல்லா.
(3) ஒப்பொலிகள் (Imitative
Sounds)
இருதிணைப் பொருள்களும் செய்யும்
ஒலிகளை ஒத்தொலிப்பவை ஒப்பொலிகள்.
எ-டு: கூ
(கூவு), கா கா-(காகம்), காக்கா (காக்கை), இம்
(இமிழ்), உர் (உரறு), ஊள் (ஊளை), குர் (குரங்கு), மா
(மாடு), சீத்து (சீறு), ஓ (ஓசை), கர் (கரை), சரசர
(சாரை), சல்- (சலங்கை-சதங்கை), கீர்-கீரி.
|