"கடல்நூல் (Oceanography)
என்னும் தற்காலக் கலை, ஒரு காலத்தில்,
தென்அமெரிக்காவினின்று ஆப்பிரிக்காவை யொட்டி
யும் இந்தியாவை யொட்டியும் ஆத்திரேலியாவரை
படர்ந்திருந்த தும், ‘காண்டுவானாக் கண்டம்’
என்றறியப்பட்டதுமான, ஒரு முழுகிய
வியனிலத்தைப்பற்றி, வியக்கத்தக்கவுண்மைகளை
அண்மையிற் கண்டுபிடித்திருக்கின்றது" என்பது
29-07-1934-ல் வெளிவந்த இந்தியப் படவிளக்கக்
கிழமையிதழ்ச் செய்தியாகும்.
"கோடியாண்டுகட்குமுன்-ஒருவேளை
அதற்கு முந்தி-ஒரு பெருங்கண்டம்
ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்
கொண்டிருந்தது" என்றார் திருவாளர் யோவான்
இங்கிலாந்து.
ii குமரிநாட்டு மாந்தன் தோற்றம் (தோரா. கி.மு.
500,000)
இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட
பழைய மாந்தன் எலும்புக்கூடுகளுள், சாலித்தீவில்(Java)
1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய
‘நிமிர்ந்த குரக்கு மாந்தன்‘ (Pithecanthropos
Erectus) காலம் கி.மு. 500,000 என்று
கணிக்கப்பட்டுள்ளது. 1961-ல்
தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில்
இலீக்கி (Leakey)
என்னும் ஆங்கில மாந்தனூ லறிஞராற்
கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள்,
ஒன்றற்குரிய கொட்டையுடைப்பான்‘ (Nut-cracker
Man or Sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000
ஆண்டுகட்கு முற்பட்ட வன் என்றும்,
இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத,
நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660
ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும்,
கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற்
பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். உண்மை எங்ஙன
மிருப்பினும், சாலித் தீவையும்
தென்னாப்பிரிக்காவையும் தன் னுடன் இணைத்துக்
கொண்டிருந்த நாடே குமரிக்கண்ட மாதலின், அந்
நிலத்து மாந்தன் தோற்றம் கி.மு. 500,000 ஆண்டுகட்கு
முந்திய தென்று மறுப்பச்ச மின்றிக் கூறலாம்.
iii குமரி மாந்தர் மொழியற்ற நிலை
(தோரா.கி.மு.5,00,000-1,00,000)
குமரிநாட்டு மாந்தன், முதற்காலத்தில்
நிலையான மணவுற வின்றி விலங்குபோல் அவ்வப்போது
தன் வேட்கைகளைத் தணித்துக்கொண்டு, மொழியும்
மொழியுணர்ச்சியுமின்றி இயற்கை யான உணர்ச்சி
யொலிகளையும் விளியொலிகளையுமேயுடையவ னாய்,
பெரும்பாலும் சைகைகளாலேயே தன் கருத்தை வெளிப்
படுத்தி வந்தான். ஆகையால், அவன் மொழி சைகை
மொழியாகவே (Gesture
Language or sign Language) இருந்தது. உடற்சைகை,
உறுப்புச்
|