மழ - மழலை - மதலை = இளமை, பிள்ளை.
ழகரம் சிலவிடத்துக் ககரமாகத்
திரியும்.
எ-டு: தொழுதி - தொகுதி, முழை-முகை.
இவ்வகையில் உழு என்னும் அடி உகு
என்றாகும்.
உகு - (உகை) - அகை. அகைதல் =
தளிர்த்தல்.
"கொய்குழை அகைகாஞ்சி" (கலித். 74)
குகு - குகை - குகைச்சு (புற்று)
சுகு - சுகை (கொத்தல், கிழித்தல்) -
சுகம் (கிளி)
துகு - (தெகு) - திகை - (முடிவு, எல்லை)
நுகு - நுகும்பு = பனங்குருத்து. நுகு - நுங்கு =
பனஞ்சுளை, இளம்பனங்கொட்டை.
புகு - பொகில் = அரும்பு. பொகில் -
போகில் = அரும்பு. போகு - போக்கு = மரக்கன்று
(பிங்.)
புகு - போ-போத்து = இளங்கிளை.
போ - போந்து (பிங்.) = இளம்பனை.
போந்து-போந்தை = (திவா.) இளம்பனை.
முகு - முகிழ் அரும்பு. முகிழ்தல் =
அரும்புதல். முகிழ்த்தல்= தோன்றுதல், அரும்புதல்,
ஈனுதல். முகு-முகை = அரும்பு. முகு- மொக்கு-மொக்குள் =
அரும்பு.
முகிழ் - முகிழம் = பேரரும்பு. முகிழ் -
முகிழி. முகிழித்தல்= அரும்புபோற்
குவிதல்.
முகிழம் என்னும் சொல், அரும்பு என்னும்
பொருளில்,
mukula, mukura,
makula, makura
என்று வடமொழியில்
திரியும்.
குமரிக்கண்ட முழுக்கினாலும், முதலிரு
கழக விலக்கிய முழுதும் கடைக்கழக விலக்கியப்
பெரும்பகுதியும் அழிந்து போனமையாலும்
நீண்டகாலமாகத் தமிழர் தமிழைப் பேணாமை யாலும்,
ஆயிரக்கணக்கான தென்சொற்கள் இறந்துபட்டன.
அதனாலேயே, பல முதலடிச் சொற்கட்கும் வழியடிச்
சொற்கட்கும் எடுத்துக்காட்ட இயலவில்லை
யென்றறிக. இறந்துபட்ட சொற்க ளெல்லாம்
பிறைக்கோட்டுள் இடப்பட்டுள. ஒரு பொறியறிஞன்
ஒரு பொறியிலில்லாத உறுப்பைக் கண்டுகொள்வது
போன்றே, ஒரு மொழியறிஞனும் அம் மொழியில்
இறந்துபட்ட சொற்களிற் சிலவற்றை அவற்றொடு
தொடர்புள்ள பிறசொற்களின் துணை கொண்டு
அறியவியலும் என்க.
|