பக்கம் எண் :

66தமிழ் வரலாறு

துரத்தல் = செலுத்துதல். துரத்துதல் = விரைவாகச் செலுத்துதல்.

முன்மைக்கும் முற்செலவிற்கும் இடைப்பட்ட கருத்து முன் தள்ளுதல்.

முன்தள்ளுதல்

உத்துதல் = முன் தள்ளுதல், கழித்தல்.

உந்துதல் = முன் தள்ளுதல். உந்தல் - உஞ்சல் - ஊஞ்சல்- ஊசல்.

உன்னுதல் = முன் தள்ளுதல்.

(துள்)-தள். ஒ.நோ: துளிர்-தளிர்.

துந்து - துந்தி = முன் தள்ளிய வயிறு. துந்தி - தொந்தி.

துருத்துதல் = தொந்தி வயிறுபோல் முன் தள்ளுதல்.

துருத்தி = காற்றை முன் தள்ளும் கொல்லுலைத் தோற்கருவி அல்லது இசைக்கருவி. துருத்தி - துத்தி - தித்தி = இசைக்கருவி.

தூண்டுதல் = விளக்குத் திரியை முன் தள்ளுதல். தூண்டு = தீண்டு

நுந்துதல் = தூண்டுதல். நுந்தா விளக்கு=தூண்டா விளக்கு. நுந்து- நொந்து.

நூக்குதல் = முன் தள்ளுதல், தள்ளுதல்.

உள்ளத்தை முன் தள்ளுதல் (ஊக்குதல்)

உய்-உயல்-உயற்று-உஞற்று.

உஞற்றுதல் = முயற்சிக்குத் தூண்டுதல், வருந்தி யுழைத்தல்.

உள்ளுதல் = உள்ளத்தை ஊக்குதல். உள்ளம்=ஊக்கம்.

ஊக்குதல் = உள்ளத்தை முற்செலுத்துதல். ஊங்கு-ஊக்கு.

தூண்டுதல் = ஊக்குதல், ஏவுதல்.

நூக்குதல் = தூண்டுதல்.

முயலுதல் = தன் உள்ளத்தை ஊக்குதல்.

Push, shoot, usher, urge, duct, duke, thurst முதலிய ஆங்கிலச் சொற்களின் வேர்ப்பொருளையும் உகர வடிவையும், இவற்றுடன் ஒப்பு நோக்க.

4. நெருங்குதல், செறிதல், கூடுதல்

பல பொருள் நெருங்குதல் செறிதலாம்.

(உள்)-அள். உள்ளுதல் = நெருங்குதல், செறிதல். அள்- அண். அண்ணுதல் = நெருங்குதல்.