துல் - துன். துன்னுதல் = பொருந்துதல்.
துல் - துன்று. துன்றுதல் = பொருந்துதல்.
(நுள்) - நள் - நண் - நண்பு. நள் - நட்பு.
புல்லுதல் = பொருந்துதல், ஒத்தல்,
தழுவுதல், கூடுதல்.
புல் - பொல் - பொரு - பொருந்து -
பொருத்து - பொத்து- பொட்டு.
பொல் - போல். போலுதல் = ஒத்தல்.
பொரு - பொருவு = ஒப்பு.
புல் - புள் - (புண்) - புணர். (புண்) - பூண் -
பூட்டு.
புல் - (புர்) - புரை. புரைதல் = ஒத்தல்.
முல் - முள் - முள்கு. முள்குதல் = தழுவுதல்.
முள் - முழு - முழுவு. முழுவுதல் = முத்துதல்,
தழுவுதல்.
முல் - மல்-மன். மன்னுதல் =
பொருந்துதல்.
மன் - மன்று - மன்றம். மன் - மனை.
6. வளைதல்
உல் - உலா - உலவு - உலாவு. உலவுதல் =
சுற்றிவருதல்.
குல் - குலா - குலவு. குலவுதல் = வளைதல்.
குல் - குள் - கொள் - கோள் - கோண் -
கோடு - கோட்டம்.
சுல் - சுலா - சுலவு. சுலவுதல் = வளைதல்.
துல் - (தில்) - திர் - திரும். திருமுதல் =
வளைதல், சாய்தல், மீளுதல்.
திரும் - திரும்பு.
(நுள்) - நெள் - நெளி - நெறி.
நெளிதல் = உடல் வளைதல். நெறிதல் =
மயிர் சுருள்தல்.
புல் - புரு - புரி. புரு - புருவம் = கண்
மேல்மயிர் வளைவு.
புரிதல் = வளைதல். வலம்புரி இடம்புரி
என்னும் சங்குகளை நோக்குக.
(முல்) - முரு - முருகு = வளைந்த காதணி. முரு -
முறு - முற்று.
முற்றுதல் = வளைதல், சூழ்தல்,
முற்றுகையிடுதல்.
முரு - முரி. முரிதல் = வளைதல்.
உல் - (உர்) - உருள், to
roll. உருள் என்னும் அடியினின்று குருள்
(to coil),
சுருள் (to curl)
முதலிய சொற்கள் பிறந்திருத்தலையும், அவ்
வடியை whirl,
swirl, twirl என்ற ஆங்கிலச் சொற்கள்
ஒருவாறொத் திருத்தலையும் நோக்குக. புருள்
என்பதினின்று புருடை (பிருடை,
|