பக்கம் எண் :

இயனிலைப் படலம்69

turning key of a lute string) என்னும் சொல்லும், முருள் என்பதினின்று முருகு(knot in wood) என்னும் சொல்லும், திரிந்துள்ளன. உழல் (வடி சநஎடிடஎந) என்னும் அடியினின்று குழல்(வடி உரசட), சுழல்(வடி சடிவயவந) என்னும் சொற்கள் தோன்றியிருத்தலும் நோக்கத் தக்கதாகும்.

7. துளைத்தல்

உள் - உளு = துளைக்கும் புழு. உளுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல்.

உளு - உழு. உழுதல் = நிலத்தைக் கீறுதல்.

குள் - குழி - குழை - குடை. குடைதல் = துளைத்தல்.

குழி - கொழு - கொழுது - கோது. கோதுதல் = குடைதல்.

கொழு = நிலத்தைத் துளைக்கும் ஏரூசி.

கொழு-கோழி = கிளைக்கும் பறவை.

குள்- குளி. குளித்தல் = உட்புகுதல், முழுகுதல், நீராடல்.

சுள் - சுர - சுரை = உட்டுளை. சுர - சுரங்கம்.

சுரைக்காய் = காய்ந்தபின் உட்டுளையமையுங் காய்.

துல் - துன் = எலிவளை. துன்னல் = உழுதல்.

துல் - துள் - துளை. துள் - தொள் - தொள்ளை - தொளை.

தொள் - தோள் - தோண்டு. தொள் - தொடு. தொடுதல் = தோண்டுதல்.

நுள் - நொள் - நொள்ளை = குழிவு, கட்குழிவு.

நொள்-நொள்ளல்-ஞெள்ளல் = பள்ளம்.

நுல்-நுழை - நூழை = துளை, வாயில்.

புல் = உட்டுளை, உட்டுளையுள்ள பயிர்வகை அல்லது மூங்கில். புல்லாங்குழல் = மூங்கிற்குழல்.

"புறக்கா ழனவே புல்லென மொழிப." (தொல். 1585)

புல்-புள்-புழு = துளைக்கும் சிற்றுயிர். புழுத்தல் = புழுத்துளைத்தல்.

புள்-பொள்-பொளி-பொறி.

பொள்ளல் = துளை, துளைத்தல். பொளித்தல் = துளைத்தல், வெட்டுதல், கிழித்தல்.

பொறித்தல் = குழித்தெழுதுதல்.

முள்-(முழு) = முழுகு - மூழ்கு. முழுகுதல் = உட்புகுதல், நீரிற் குளித்தல்.